Tuesday, January 04, 2005

பச்சோந்திகள்

வணக்கம்.
சுனாமி அலையிற் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. புலம் பெயர் நாடுகளில் ஈழத்தவர்களுக்காக மக்களிடம் நிதி சேகரிக்கப்படுகிறது. பிரதானமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகமே இவற்றை ஒழுங்குபடுத்துவதாக அறிகிறேன். தமிழர்கள் சேகரிக்கும் பணத்திற் பெரும்பகுதி T.R.O ஊடாகவே அனுப்பப் படுகிறது என்றும் அறிகிறேன்.

T.R.O என்பது இன்று மட்டுமன்று, யுத்த காலத்திலிருந்தே மக்களுக்குச் சேவை செய்து வரும் ஓர் அமைப்பு. இன்னும் சொல்லப்போனால் ஏனைய பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களைவிட மக்களோடு மக்களாக நின்று முழுநேரப் பணி புரிந்த அமைப்பு. தனக்கென சீரான மனிதவள மற்றும் நிர்வாகக் கட்டமைப்புடன் (சில சர்வ தேச நாடுகள் உட்பட) இயங்கி வரும் அமைப்பு. தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றது.

நிற்க, T.R.O ஐ மட்டந்தட்டி முடக்கும் நடவடிக்கையிற் சிலர் ஈடுபட்டுள்ளார்கள். இது தொடர்ந்துவருவது தானென்றாலும் தற்போது சிலர் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர். சுனாமிக்கு முந்தின வெள்ள அனர்த்த நிவாரணப்பணியில், கிழக்குப் பகுதியில் T.R.O இன் பங்கு எத்தகையது என்பது அங்குள்ள மக்களுக்குத் தெரியும். வெள்ள நிவாரணப் பணிக்கென அங்கு நின்ற T.R.O உறுப்பினர்கள் ஏழு பேரளவில் சுனாமியின் தாக்குதலிற் பலியானதாக அறிகிறேன்.வெள்ளப் பாதிப்பிற்குட்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணியிலும் சுனாமியின் தாக்குதலுக்கான நிவாரணப்பணியிலும், வடக்குக் கிழக்கில் (குறிப்பாக இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியில்) T.R.O இல்லையென்றால் முதல் மூன்று நாட்களுக்கான நிலைமையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இன்னும் எத்தனை அவலங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்? T.R.O ஐ அழிக்க நினைப்பவர்கள் எதை விரும்புகிறார்கள்? அவர்களின் குரூர புத்தி எதைக் கணக்கிடுகிறது? வெறும் புலியெதிப்பு வாதம் எனும் போர்வைக்குள்ளால் அவர்கள் செய்ய நினைப்பது எதை?

ஏன் T.R.O ஊடாக பணம் கொடுப்பது சிறந்தது என்பதற்குப் பல நியாயங்கள் கூறப்பட்டு விட்டன.ஒப்பீட்டளவில் எந்தவொரு பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கும் தமிழர் தாயகப்பகுதியிற் பரவலான செயற்றிறனுள்ள ஆளணிவளமோ நிர்வாகக் கட்டமைப்போ இல்லை. இதைவிட அத்தொண்டு நிறுவனங்களின் நிர்வாகச் செலவென்பது மிக உயர்ந்தது. உதவித்தொகையிற் குறிப்பட்ட பகுதிப்பணம் நிர்வாகச்செலவுக்கே போய்விடும். இத்தொகை ஒப்பீட்டளவிற் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிக உயர்வாக உள்ளது.(I.C.R.C இற்கு வழங்கப்படும் பணத்தில் 15 வீதம் அந்நிறுவனத்தின் நிர்வாகச் செலவுக்காக எடுக்கப்படுமென அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.)இதைவிட பிரதேச அறிவு, தொடர்பாடல் (மொழிச் சிக்கல்) யாவும் T.R.O இற்கே சாதகமாக உள்ளது.

சரி அதை விடுவோம். சிங்கள அரசு நியாயமாக நடந்து கொள்ளும் என எத்தனை வீதத் தமிழர்கள் (ஈழத்தமிழர்) நம்புகிறார்கள்? தாம் வழங்கும் நிவாரணம் சரியாய்ப் போய்ச் சேர்கிறதா என்பதை பன்னாட்டு நிறுவனங்களால் எவ்வளவு தூரம் கண்காணிக்க முடியும்? (இதற்குப் பிரதேச மற்றும் மொழியறிவு என்பன மிகமிக அவசியம்.)

T.R.O ஐ கேள்வி கேட்க உரிமையுண்டு, குறிப்பாக பணம்வழங்கும் மக்களுக்கு. அதை விமர்சனம் செய்யவும் தகுதியுண்டு. ஆனால் சரியான தகவல்களையும் காரணங்களையும் வெளியிட்டு நடுநிலைமையுடன் செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய அழிவு நடந்துள்ள வேளையில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சொல்வதிற் பயனில்லை. "எங்கள் முதற்பணி T.R.O ஐ முடக்குவதே" எனும் கோசத்தோடு இதை முன்னெடுப்பவர்கள் மிகக் கீழ்த்தரமான வேலைகளைச் செய்கிறார்கள்.வெள்ள நிவாரணத்தின் போது T.R.O மக்களுக்கு உதவி செய்யாமல் அரசாங்கத்தின் மீது கோபம் ஏற்படுத்துவதற்காகப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தார்களாம். இப்படிப் போகிறது இவர்கள் கதை. இதை எழுதுபவர்கள் உண்மையில் தமிழர் தாயகத்தைப்பற்றி பூகோள அறிவு இல்லாமலும் எழுதுகிறார்கள். இதற்கிடையில் 2000இற்கும் மேற்பட்ட புலிகள் பலியாகி விட்டதாகவும் ஏராளமான ஆயுதத் தளபாடங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் திருப்பித் திருப்பிச் சொல்லி கனவிலேயே இன்பம் காணுகிறார்கள். இதைவிட முசுப்பாத்தி என்னெண்டா, புலிகள் எல்லாம் இழந்து நொடித்துப் போயுள்ள இந்த வேளையைப் பயன்படுத்தி தமிழர்களுக்கான தீர்வைப் பெற்று விட வேண்டுமாம். இதைவிட்டால் சந்தர்ப்பமில்லை என்கிற ரீதியிற் செல்கிறது இவர்களின் அரசியல் ஞானம். உண்மையில் இவர்கள் யாராவது முன்னாள் போராளியாயிருந்து அடித்துத் துரத்தப்பட்டிருந்தால் இந்த ஒரு காரணத்துக்காகவேனும் நான் “சகோதரப் படுகொலை” எனச் சொல்லப்படுபவற்றை நியாயமென்று ஏற்றுக்கொள்ளத் தயார்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"பச்சோந்திகள்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (03 January, 2005 15:36) : 

வசந்தன்,
இப்படியான ஆக்களை சும்மா விட்டுவிடுவதுதான் நல்லது. நெருங்கிய உறவுகளையெல்லாம் பேரழிவில் இழ்ந்துபோனவர்களுக்கு இவை போன்றவை நிச்சயம் வெஞ்சினத்தைத்தான் தரும்.
இவர்களின் நடுநிலை/மனிதாபிமானம் எப்படிப்பட்டது என்றெல்லாம் சொல்லத்தேவையில்லை. "ஒரு இலங்கை இராணுவச்சிப்பாய் ஒரு தமிழ்பெண்ணின் சட்டையைப் பிடித்துவிட்டால் உடனேயே பாலியல் பலாத்காரம் என கூப்பாடு போட்டு உலகம் அறியச் செய்துவிடுவார்கள்" என்று எழுதுகின்ற வக்கிரம் பிடித்த மனிதர்களையெல்லாம் பற்றி என்னசொல்ல இருக்கிறது?

 

post a comment

© 2006  Thur Broeders

________________