Tuesday, April 12, 2005

வரலாற்றுச் சாதனை.

கடைசியாக பரலோகத்திலிருந்து கிடைத்த அறிக்கையின்படி, கடவுள்களின் வாழ்க்கை வரலாற்றில்(?) ஒரே நேரத்தில் அதிகூடிய வேண்டுதல்கள் வந்ததாக இன்றைய நாள் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்த கடவுள்களின் கூட்டமைப்பு(?) வெளியிட்ட அறிக்கை ஒஸ்ரேலிய நேரப்படி இரவு 10.15 க்கு வெளியாகியது.

அந்த அறிக்கையின் விவரப்படி, பாகிஸ்தான் இந்திய அணிகளுக்கிடையேயான துடுப்பாட்டப் போட்டியின் கடைசிக் கட்டத்தில் கடவுள்களுக்கு வரும் மன்றாட்டங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியதாகவும், இறுதி ஓவர் வீசப்படும் போது அது இன்னும் அதிகரித்து உச்சத்தைத் தொட்டதாகவும் கூறப்படுகிறது. அதுவும் கடைசிப்பந்து வீசப்படுவதற்கான நேரத்திலேயே வரலாறு காணாத அளவு வேண்டுதல்கள் கடவுள்களின் சன்னிதானத்துக்கு வந்து சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதுதான், இதுவரையான வரலாற்றுக்காலத்தில் அதிகூடிய வேண்டுதல்கள் ஒரே நேரத்தில் வந்து குவிந்த சம்பவமாகக் கடவுள்களின் கூட்டமைப்புக் கருதுகிறது. இதை கின்னஸ் புத்தகக் குழுவுக்கு அறிவிக்க ஒவ்வொரு கடவுளிடமிருந்தும் ஒவ்வொரு சிறப்புத் தூதுவர் விரைகிறார்கள்.

பரிதாபமான விசயம் என்னவென்றால், அந்தக் கடைசிப் பந்து வீசி முடிந்ததும் சில கடவுள்களுக்கு கடுமையான வசைமழை பொழியப்பட்டதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்தார். எனினும் கடவுள்களின் கூட்டமைப்பு இச் செய்தியை மறுத்துள்ளது.

பிந்திய செய்தி:
கடவுள்களுக்கு வந்த வேண்டுதல்களின் எண்ணிக்கை விவரம் கின்னஸ் குழுவினரால் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து கடவுள்களுக்கிடையில் சண்டை மூண்டு விட்டதாக எமக்குக் கிடைக்கும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மிகுதிச் செய்திகள் பின்னர் விரிவாகத் தரப்படும்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"வரலாற்றுச் சாதனை." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (13 April, 2005 00:25) : 

எழுதிக்கொள்வது: Mathy Kandasamy

லொள்ளு தாங்கல!

vasanthan,

could you please write to me at

mathygrps at yahoo dot com

thanks vasanthan

11.37 12.4.2005

 

said ... (13 April, 2005 00:40) : 

அட கடவுளே..

வசந்தன் படம் பாத்தன். ஒண்டு நீங்கள் மற்றது சயந்தன்.. நீங்கள் நிக்கிறது இடமா? வலமா?

 

said ... (13 April, 2005 01:06) : 

Inzamam-ul-Haqன் பவுண்டரியுடன் கடவுளரும் சண்டையை நிறுத்திவிட்டதாய் கேள்வி. அதுசரி, நீங்கள் ஏதாவது motorcycles gangல் இருக்கின்றீர்களோ? படத்தைப் பார்த்தால் அப்படித்தான் எனக்குத்தோன்றியது :-). எனக்கு உங்களின் காங்கில் இணைய விருப்பம். எவ்வளவு membership fees கட்டவேண்டும் உங்கள் காங்கில் இணைவதற்கு?

 

said ... (13 April, 2005 01:22) : 

மதி!
நான் ஏற்கெனவே பதில் போட்டுட்டன்.
கறுப்பி!
நீங்கள் சரியான சோம்பேறி போல. உதுகள என்னட்டயே கேக்கிறது. அந்தப் பதிவிலயே சொல்லிப்போட்டன், சயந்தனின்ர படம் ஏற்கெனவே வெளியிட்டுவிட்டதால என்னைக் கண்டு பிடிக்கிறது சுலபம் எண்டு. அத வச்சு ஷ்ரேயா சரியாக் கண்டு பிடிச்சிட்டா.
டி.சே.! நான் இப்ப அப்பிடியொரு காங் இலயும் இல்ல. இருந்தாலும் உங்களச் சேத்துக்கொள்ளிற திட்டம் இல்ல. ஏனெண்டா இது தனிய பிரமச்சாரியளுக்கு மட்டுந்தான். அதோட கிட்டடியில கலியாணம் கட்டப்போற ஆக்களுக்கும் இடமில்ல.
மற்ற விசயம் என்னெண்டா, இன்னும் கடவுளுகளுக்குள்ள சண்டை ஓயேல. ஆரிட்ட கூடுதலான வேண்டுதல் வந்தது எண்டுதான் அவைக்குள்ள பிரச்சின.

 

said ... (13 April, 2005 03:48) : 

Hello VaSayanthan,
Itha yaaroda pathivula podarathunnu, ungaluku Sandai varaliya?

Ungada photo paathen... Aaana, nambikai varalai...

kirukan

 

said ... (13 April, 2005 10:09) : 

ஐயா கிறுக்கன்!
உங்களுக்குப் பதல் சொல்ல என்னால முடியாது.
இப்ப என்ன புதுக்கதையெண்டா, அந்தப் படத்தில நிக்கிறது தான்தான் எண்டு புதுசா ஒராள் வந்திருக்கிறார். எங்கள என்ன செய்யச் சொல்லுறியள்?

அதுசரி!
நான் எழுதின இந்தப் பதிவு பற்றி ஒருத்தருமே மூச்சு விடேலயே. எவ்வளவு கஸ்டப்பட்டு இந்த அறிக்கையை வேண்டி செய்தி வெளியிட்டனான்?

 

said ... (13 April, 2005 15:43) : 

நான் கொஞ்சம் நாத்திகம் பேசுற ஆள். எண்டாலும் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்டது எனக்குச் சந்தேகமாத்தான் இருந்திச்சு. அதை நேற்றைய போட்டியை வைச்சுத்தான் போக்கினன்..
நேற்று போட்டி நடக்கேக்க இல்லாத கடவுளுக்கு (ஆமா இல்லாத கடவுள் தான். நான் தான் நாக்திகம் பேசிறவளாச்சே) சொன்னன்.. " இன்டைக்கு இந்தியா வெண்டா நீ இருக்கிறாயெண்டு நம்பிறன்... தோத்திச்சோ நீ இல்லை". இந்தியா தோத்திடுச்சில்லையோ அதன்படி கடவுள் இல்லை என்டு முடிவெடுத்திட்டன்.

ஆனா நீங்க சொல்றதைப் பார்த்தா கடவுளுக்கு அந்த நேரம் இருந்த ரென்சன்ல தான் நான் சொன்னது பத்திக்காம கணக்கெடுக்காம விட்டிட்டாரோ என்று தோணுது. கடவுளே.. நீ இருக்கிறியா.. இல்லையா??

 

said ... (13 April, 2005 16:08) : 

யதுகிரி!
நீங்கள் ஆணா பெண்ணா எண்டு குழம்பிக் கொண்டிருந்தன். அனா இப்ப தெளிவு படுத்தீற்றியள்.

கடவுள் இருக்கிறார். எனக்குக் கிடைச்ச தகவல் இப்பிடிச் சொல்லுது:

வந்து கொண்டிருந்த விண்ணப்பங்கள திரட்டிக் கடவுளிட்டக் குடுக்க அவரிண்ட "அடியாட்கள்" முயற்சி செய்தினம். ஆனா கடவுள்கள் தங்கட பிரத்தியேக அறையில இருந்து வெளிய வரேல. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வெளியில வந்த கடவுளிட்ட மனுக்களக் குடுக்க அதப் பாத்திட்டு கடவுள் சொன்னாராம்,
"Too Late. ஏனெண்டா இப்பதான் ரீ.வி. இல பாத்திட்டு வாறன், இன்சமாம் ஒரு பவுண்ரி அடிச்சு வெண்டிட்டார்."

 

post a comment

© 2006  Thur Broeders

________________