மனுசப் பிறவிகள்.
இப்ப மாலனுக்கும் சிவகுமாருக்கும் நடக்கிற பிரச்சின தான் தமிழ் மணத்தில சூடான விசயமாயிருக்கு. என்ர வலைப்பதிவின்ர தீவிர வாசகர் சிலர் எனக்கு தனியாக மின்னஞ்சல் போட்டிருக்கினம். என்ர பதிவில கடசியா நான் எழுதினது 'நாய்ப் பிறப்புக்கள்' எண்ட பதிவு. என்ர வலைப்பக்கத்துக்கு இடைக்கிடை வாற ஆக்களுக்கு இந்த ‘நாய்ப் பிறப்புக்கள்’ எண்ட பதிவுதான் முதலில வரும். அது அவயளச் சங்கடப்படுத்திறதாயும் வேறயொரு பதிவ எழுதி அத பின்னுக்கு அனுப்பச்சொல்லியும் அரியண்டம் குடுக்கினம். அவயளின்ர அரியண்டத்தால தான் 'மனுசப்பிறவிகள்' எண்ட இந்தப் பதிவு. இனி கொஞ்ச நாளா இந்தப்பதிவு இருக்கேக்க வாற ஆக்களுக்கு முகஞ்சுளிக்காது. நான் இப்ப கொஞ்ச நாளா ஒண்டும் எழுதேல. எழுத விசயமில்ல எண்டில்ல. எல்லாப் பதிவையும் வாசிச்சுக்கொண்டிருக்கிறன். அப்பப்ப பின்னூட்டங்களும் குடுத்துக்கொண்டிருக்கிறன். எனக்குத் எழுதத் தோன்றேக்க எழுதுவன். அதுக்கிடையில ரெண்டு கிழம விடுமுறைக்குப் பிறகு இண்டைக்கு பள்ளிக்கூடம் தொடங்கீற்றுது. லீவு விடேக்கயே ஏராளமான வீட்டுப்பாடங்கள் தந்திட்டாங்கள். கடசி மூண்டு நாளாத்தான் அதுகளச் செய்யத் துடங்கினனான். இன்னும் நிறைய வேலையள் மிச்சமிருக்கிறதும் நேரமில்லாததுக்குக் காரணம். அதுக்குள்ள என்னையும் சயந்தனையும் ஒரே ஆள் எண்டு கொஞ்சப் பேர் குழம்பிக்கொண்டு இருக்கினம். அருணன் முக்கியமான ஆள். அவரோட ரெண்டு பேருமே ஒரே நேரத்தில சற் பண்ணிக்கூட அந்தாள் நம்பேல. பரிசீலிச்சுக் கொண்டு இருக்கிறாராம். ரெண்டு பேரிண்ட எழுத்தும் ஒரே மாதிரி இருக்காம். சரி நீர் பரிசீலிச்சுக்கொண்டே இரும் எண்டு அவரிட்டச் சொல்லீட்டன். சீ!!!... இப்பிடிச் சந்தேகப் படுகிறதுகளும் ஒரு மனுசப் பிறவியோ? (அப்பாடி ஒரு மாதிரி தலைப்பை பொருந்த வச்சிட்டன்) Labels: அனுபவம், பதிவர் வட்டம், விவாதம் |
"மனுசப் பிறவிகள்." இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: அருணன்
உம்மட பக்கத்துக்கு வாறநேரமெல்லாம் நாய்ப்பிறப்புகள் நாய்ப்பிறப்புகள் எண்ட தலையங்கததைப்பாத்து பாத்து வெறுத்தப்போய் விடுத்த கோரிக்கைக்கு நிவாரணம் தந்ததுக்கு மெத்தப்பொரிய உபகாரம்.ஆனா அதுக்கு என்னப்பலிக்கடா ஆக்கிப்போட்டீர் பரவாயில்லை.அதோட முந்தி மாதி இல்லாம பதிவு வலு சின்னதாகவும் இருக்கு.
பரவாயில்ல இப்ப அதுதானே ஸ்டைல் பதிவில மிச்சமெல்லாம் சண்டையும் சச்சரவுமாக இருக்கவேணும்.அப்பதானே மாலனும் சிவகுமாரும் மாதி அருணனும் வசந்தனும் இல்லது சயந்தனும் எண்டு சனம் எழுதும்.
சபாஷ் சரியான போட்டி.
19.6 11.4.2005
எழுதிக்கொள்வது: பாலு மணிமாறன்
அழகான நடை. நாய்பிறவியோ, பேய் பிறவியோ - உங்கள் நடைக்காகவே படிக்கலாம்.
பள்ளியில் படிக்கும் காலத்தில்தான் இப்படி தெகிரியம் கிடைக்கும் - கிடைக்கிற காலத்தில் தெகிரியமா எழுதுங்கள்.
17.42 11.4.2005
என்ன என்ரை பெயர் அடிபடுகுது இங்கை? என்ன நடக்குது
எழுதிக்கொள்வது: kirukan
(அப்பாடி ஒரு மாதிரி தலைப்பை பொருந்த வச்சிட்டன்) Sayanthan has used the same sentence somewhere in his earlier post...
Cat is coming out..
Kirukan
http://kirukalkal.blogspot.com
14.50 11.4.2005
//Cat is coming out..//
மியாவ்.. மியாவ்..மியாவ்.
எங்கள இனியும் பேக்காட்டேலாது. உடனடியா புளொக்கில சயந்தனின்ர படமும் வசந்தன்ர (பெயரிலையும் ஒற்றுமை இருக்கே) போட்டு ரெண்டும் வௌவேற ஆள் எண்டுறதை நிரூபிக்க வேணும். இல்லாட்டி???
கறுப்பி நான் என்ரை படம் நிறைய போட்டு விட்டேன். இப்பவும் கடைசியாக ஒரு படம் போட்டன். இனி வசந்தன் தான் போட வேணும். அது சரி.. பெயரில் என்ன ஒற்றுமை?
ம்.. உருப்படியான ஒரு படம் வேணும். அப்பதான் கிட்டக் கிட்ட வைச்சு ஆறு ஒற்றுமையக் கண்டு பிடிக்கலாம். பெயர் "ந்தன்" எண்டு முடியுது. கறுப்பியா கொக்கா?
வசந்தன் படிக்கிறாராம். எத்தினையாம் வகுப்பு? அரிவரியா? (*_*)
எழுதிக்கொள்வது: ஒருவன்
// ரெண்டு பேரிண்ட எழுத்தும் ஒரே மாதிரி இருக்காம். //
கொம்ப்யூட்டரில் எல்லா எழுத்தும் ஒரே மாதிரித் தானே இருக்கும். என்ன நான் சொல்லுறது
3.38 13.4.2005
எழுதிக்கொள்வது: kulakaddan
அப்பச்சரி எல்லாரும் மனிசர் தான் . எடீனண்டா...............
22.41 11.4.2005
எழுதிக்கொள்வது: கவி
//இப்பிடிச் சந்தேகப் படுகிறதுகளும் ஒரு மனுசப் பிறவியோ? (அப்பாடி ஒரு மாதிரி தலைப்பை பொருந்த வச்சிட்டன்) //
நல்லா முடிச்சிட்டியள். ஆ.....
7.40 12.4.2005
யோவ் கிறுக்கன்!
பேருக்கேத்த மாதிரியே எழுதிறீர்.
(இந்த இடத்தில ஸ்மைலி ஒண்டு வரும்)
கறுப்பி!
எங்களுக்கு வேல வைக்காமல் (டக்ளஸ்) தேவானந்தா என்ர படம் போட்ட பதிவில தன்ர திறமையக் காட்டீட்டார்.
நான் இந்தப் பதிவில கடசியாக் கேட்ட கேள்வி உங்களுக்கும் பொருந்துமோ எண்டு பாருங்கோ.
எழுதிக்கொள்வது: அருணன்
சந்தேகத்தை கிளப்பின நானே சும்ம இருக்கிறன்.நீஞ்கள் ஏனப்பா சண்டை பிடிக்கிறியள்.கறுப்பி ஒண்டை மட்டும் இஞ்ச அடிச்சு சொல்லிறன் ரெண்டு பேரையும் விசாரிச்சு வெளீல கொண்டு வாறது என்ர பொறுப்பு சரிதானே.
சரி அவரவர் வீடு வழிய போங்கோ.ஆம்பிளையளுக்கு .ன்னமும் சந்தேகமெண்டா குவாட்டர் அடிச்சிப்போட்டு குப்பபுறப்படுங்கோ!
22.21 12.4.2005
எழுதிக்கொள்வது: Seelan
உதென்ன ஆம்பிளைகளுக்கு... ஏன் அவை மட்டும் தான் குவாட்டர் அடிக்கலாமோ? என்னை விட இது பற்றி பேசுறதுக்கு கறுப்பிதான் சரியான ஆள்.. கறுப்பி இங்கை வாங்கோவன். இதை ஒருக்கா கேளுங்கோவன்..
23.18 13.4.2005
சீலன் முந்தீற்ரியே.. நான் ரைப் பண்ணக் கொஞ்சம் லேட்டாப் போச்சு. அதுதானே உங்கட அம்மா அப்பாட்டக் கேட்டுப்பாருங்கோ ஆச்சி அப்பாத்தா எல்லாம் என்னமாய்க் குவாட்டர் அடிச்சிருப்பீனம். இப்பதான் எங்கட அம்மா அம்மம்மாக் காலத்தில வந்து எங்கட குடியக் கெடுக்கீனம். ஒண்டு தெரியுமே பொம்பிளைகள் குவாட்டர் அடிச்சுப் போட்டு ஸ்ரெடியா இருக்கீனம். ஆம்பிளகள்தான் சத்தி எடுக்கிறதும் சண்டைக்குப் போறதும். ம்.. ஒண்டிலையும் ஸ்ரெடி இல்லை..