Thursday, March 31, 2005

படம் காட்டுறன்

வணக்கம்!

ஒஸ்ரேலியாவில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் எடுக்கப்பட்ட படம் சயந்தனின் வலைப்பதிவல் போடப்படும் என்று அறிவிப்புத் தந்து நாட்கள் சில கடந்து விட்டன. ஆனால் இன்னும் படம் வரவில்லை என்ற ஏக்கம் உங்களுக்கு இருந்திருக்கும். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்தான். சயந்தன் 'மசுந்திறதப்' பாக்க எனக்குச் சந்தேகம் வந்திட்டுது. அடிச்சுப்பிடிச்சு ஆளிட்ட அந்தப் படத்த வேண்டீட்டன். படத்தப் பாக்கத்தான் விளங்கீச்சு ஏன் அவர் மசுந்தினவர் எண்டு. எண்டாலும் வாசகப் பெருமக்களின்ர ஆவலப் பூர்த்தி செய்யுறதுக்காக அந்தப் படத்த இப்ப இதில வெளியிடுறன்.


Image hosted by Photobucket.com


படத்தில ஆர் எங்க நிக்கிறதெண்டு கேக்க வேண்டாம். நீங்களே கண்டு பிடியுங்கோ. சயந்தனின்ர படம் ஏற்கெனவே வெளிவந்திட்டதால ரெண்டு பேரயும் இனங்காணுறது சுகம். (மூஞ்சயளின்ர விறுத்தத்தில கண்டு பிடிக்கிறதோ?)

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"படம் காட்டுறன்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (31 March, 2005 01:41) : 

எழுதிக்கொள்வது: ஒருவன்

பூந்து பூந்து (மசுந்திறது மாதிரி இதுவும் ஒரு சொல்லு) பாக்கிறன்.. ஒண்டும் தெரியிதில்லை

2.8 31.3.2005

 

said ... (31 March, 2005 01:53) : 

வசந்தன்
உங்களாலதான் எனக்கு வேலை போகப் போகுது. உங்கட எழுத்து நடை என்னை வாய்விட்டுச் சிரிக்க வைக்க இஞ்ச வேலை இடத்தில எல்லாரும் என்னை ஒரு மாதிரிப் பாக்கீனம்.
அது சரி சயந்தன் பேய்க் கறுப்பாமே உண்மையா?

 

said ... (31 March, 2005 10:03) : 

திருநாளைblogகர்!
நான் அகரவலையில உங்களுக்கு எழுதின பதில் பாத்தனியளோ?
மேய்க்கிறதுக்கு எவ்வளவோ இருக்கேக்க கங்காருவோட ஏன் மல்லுக்கட்டிறன்?
உங்கட பதிலப் பாத்தா எங்கடையள் போல கிடக்கு. இனி உங்கள ஆரெண்டு கண்டு பிடிக்கிறதில கொஞ்சநாள் (எனக்கில்ல) போகும் போல.

 

said ... (31 March, 2005 12:19) : 

எழுதிக்கொள்வது: ஷ்ரேயா

மீசை மன்னன் நீங்கள்தானே? திடீரென்று மாநாடு கூட்டியிருக்கிறீங்க? எங்களுக்குச் சொல்லாமல் ஹ்ம்!

12.46 31.3.2005

 

said ... (31 March, 2005 13:02) : 

ஷ்ரேயா!
மாநாட்டுப் பதிவு படிச்சனியளோ?
சயந்தனின்ரயும் படியுங்கோ. என்ன கொஞ்ச நாளாக் காணேல. உங்கட பதிலுகளத் (வயித்தெரிச்சல) தான் எதிர்பாத்துக் கொண்டு நிண்டனாங்கள். மொடன் கேள் உட்பட மற்றாக்களயும் காணேல.

 

said ... (12 April, 2005 12:05) : 

எழுதிக்கொள்வது: Devanantha

வணக்கம் வசந்தன்

உங்கள் படத்தை தெளிவாக்கிய பின்
இதோ..
ஜiஅபஸாவவி:ஃஃiஅப187.நஉhழ.உஒஃiஅப187ஃ943ஃகiடெ28யர.திபஜஃiஅபஸ

இருட்டா போட்டா எங்களால அடையாளம்
காண முடியாயாதா என்ன?

3.7 12.4.2005

 

said ... (12 April, 2005 12:10) : 

வணக்கம் வசந்தன்

உங்கள் படத்தை தெளிவாக்கிய பின்
இதோ..
1.

http://img187.echo.cx/my.php?image=finl28au.jpg

2.
http://img186.echo.cx/my.php?image=finl31if.jpg

இருட்டா போட்டா எங்களால அடையாளம்
காண முடியாயாதா என்ன? :)

 

said ... (12 April, 2005 15:58) : 

ஐயா தேவானந்தா!
நீங்கள் ஆரெண்டே தெரியாது. ஆனா நரி வேல பாத்திட்டியள். பிரச்சினையில்ல. உங்கட திறனுக்கு என்ர பாராட்டுக்கள். ஆனா டக்லஸ் எண்ட பேர முன்னுக்குச் சேத்துக்கொள்ளுங்கோ.
எனக்கென்னவோ இனித்தான் பிரச்சினை இருக்கிற மாதிரித் தெரியுது.

 

said ... (13 April, 2005 08:19) : 

எழுதிக்கொள்வது: Pragash

சயந்தன் மிகவும் மெலிவானவர். இந்தப் படத்தில் அவர் இல்லை. வசந்தனை எனக்குத் தெரியாது. மேலும் இங்கு நிற்கின்ற ஒருவரை எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். ஏனெனில் அது நான் தான்.
பிரகாஷ்
சிட்னி

8.43 14.4.2005

 

said ... (27 May, 2005 03:31) : 

எழுதிக்கொள்வது: Nalayiny Thamaraichselvan

புhந்த புhந்து பாத்தன். பயக்ரமா மசுந்தினதின்ரை விசயம் இப்ப புரியுது. ஆனாலும் நீங்கள் பயங்கர சுத்து மாத்து.
யேடயலiலெ வுhயஅயசயiஉhளநடஎயn

Nalayiny Thamaraichselvan

10.52 26.5.2005

 

said ... (13 February, 2007 16:40) : 

நன்றி தேவானந்தா...!

இவர் இருட்டாக்கினால் அவர் வெளிச்சம் போடுறார்... ஐயோ...! ஐயோ!

 

post a comment

© 2006  Thur Broeders

________________