Thursday, February 17, 2005

சில நேரங்களில் சில மனிதர்கள்…

ஜெயகாந்தனின் நாவல் படமாக்கப்பட்டுள்ளது. கறுப்பு வெள்ளையில் வந்த இப்படத்தைப் பார்க்க வேண்டுமென்று நீண்ட நாட்களாய் அலையோ அலையென்று அலைந்திருக்கிறேன். மலேசியாவின் கோலாலம்பூரில் கண்ணில் தெரியும் வீடியோக் கடைகளில் எல்லாம் ஏறி இறங்கியும் பலனில்லை. பலருக்கு அப்படி ஒரு படம் வந்ததே தெரிந்திருக்கவில்லை. கொழும்பிலும் நிறையக் கடைகள் ஏறிஇறங்கியும் பலனில்லை. இறுதியில் யாழ்ப்பாணம் குருநகரில் ஒரு பழைய கடையில் கண்டுபிடித்தேன். (பிரபலமான வேறுகடைகளில் கிடைக்கவில்லை). படக்கொப்பி பரவாயில்லை. பார்க்கக் கூடியவாறு இருந்தது. படமும் அப்படித்தான்.

எழுத்தாளராக வரும் நாகேஷ் அசத்தியிருந்தார். மற்ற நடிகர் நடிகைகளின் பெயர்கள் தெரியாது. ஏறத்தாள எல்லோரும் நன்றாகவே நடித்திருந்தனர்.அதில் கங்காவாக வருபவரின் நடிப்புத்தான் அசத்தல். யாரது நடிகை இலட்சுமியா? என்னைப்பொறுத்தவரைஇ கங்காவை அப்படியே கண்முன் நிறுத்தியிருந்தார். அவர் தான் படத்தின் அத்திவாரமே. ம்…இப்படி நடிப்பையும் நடிகைகளையும் இனி எங்கே பார்க்கப்போகிறோம். இதேபோல் பெண்ணை (மட்டுமே?) மையப்படுத்தி தமிழ்த் திரைப்படங்கள் வருமா? பாசிலின் “பூவே பூச்சூடவா” வை ஓரளவு சொல்லலாம்.

படத்தின் முடிவு நாவலிலிருந்து மாறுபாடாகக் காட்டப்பட்டிருந்தாலும் ஏனைய பகுதிகள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன. நாவலில் ஏற்பட்ட உணர்வு சிதையாமல் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் நாவலை வாசித்து ஊறியபின் படத்தைப்பார்த்ததால் முழுமையான உணர்வைப் பெற்றேன். நாவலைப் படிக்காத யாராவது இப்படத்தைப் பார்த்துவிட்டு பின் நாவலைப்படிக்கும் போது ஏற்படும் அல்லது ஏற்பட்ட உணர்வை அறிய ஆவலாயிருக்கிறேன். இப்படம் வழமையிலிருந்து மாறுபட்ட ஒரு மாற்றுச் சினிமா முயற்சி என்பதில் சந்தேகமில்லை. ஜெயக்காந்தனின் இந்நாவல் உருவாக்கிய சர்ச்சையளவுக்கு இப்படம் பேசப்படவில்லையென்றே நினைக்கிறேன். (பெண்ணொருத்தி பிற ஆடவன் ஒருவனுடன் கலந்த பாவத்தைப் போக்க தலையில் தண்ணீர் ஊற்றிப் பாவத்தைக் (?) கழுவிக்கொள்வது)
ஏன் இயக்குநரால் நாவலின் முடிவு மாற்றப்பட்டது? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"சில நேரங்களில் சில மனிதர்கள்…" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (17 February, 2005 19:23) : 

நாவலையும் வாசித்தேன். படத்தையும் பார்த்தேன்.
அந்த நேரத்தில் மனசில் அப்படியே படிந்து போய் விட்ட படம்.
மனதை முழுமையாக ஆக்கிரமித்த படம்.
இன்னும் கூட நினைக்கையில் மனசைப் பிசையும் படம்.
சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னொருதரம் அப்படத்தைப் பார்க்கவும்
அக்கதையை வாசிக்கவும் விருப்பம்.

 

said ... (17 February, 2005 20:23) : 

நன்றி சந்திரவதனா, ஏன் இயக்குநரால் நாவலின் முடிவு மாற்றப்பட்டது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

 

said ... (17 February, 2005 23:28) : 

It's not readable in FireFox.

 

post a comment

© 2006  Thur Broeders

________________