Sunday, January 09, 2005

மருண்டவன் கண்ணுக்கு....

வணக்கம்.
யாரோ ஒரு புண்ணியவான் (தீர்க்க தரிசி?) வலைத்தளத்தில் எழுதியிருந்தார் இப்படி. “இந்து பத்திரிகையின் அடுத்த செய்தி பிரபாகரனும் பொட்டு அம்மானும் சுனாமியில் இறந்து விட்டதாகத் தான் இருக்கும்.” எப்படி ஐயா கணித்தீர்? உம் வாயில் வெல்லத்தப் போட.
ஆனால் இது இந்துவிடமிருந்து உற்பத்தியாகவில்லை. இச்செய்தியின் மூலம் தயாசந்தகிரியாம். இது இந்து மீதான் விமர்சனம் அன்று. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? ஆவலாய் எதிர்பார்த்திருக்கும் செய்தியொன்று வந்தவுடன் ஆசையாய் பிரசுரித்துள்ளார்கள்- எல்லாப் பத்திரிகைகளையும் போல.
சிறிலங்கா அசர வானொலியும் தொலைக்காட்சியும் தமிழ் மக்களிடம் நம்பிக்கையிழந்து பல வருடங்களாகி விட்டன. ஆனால் இப்படியான ஒரு சூழலில் தமிழ்மக்கள் என்ன மாதிரி இதை எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் விளங்குகிறது.அதாவது அரசுக்கு இச் சுனாமியால் ஏற்பட்ட இழப்பு மிகமிக அதிகமாக இருக்கும்போலுள்ளது. அவர்கள் ஆடும் கூத்தைப் பார்க்க அப்படித்தான் தோன்றுகிறது. இல்லாவிட்டால் இப்படியொரு இக்கட்டான நிலையில் இப்படி கீழ்த்தரமான செய்திகளை வெளியிடுவார்களா? ஏதோ சொல்வார்களே “மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்”.
அது சரி, இப்பிடியான வேலையளுக்கு வழக்குக் கிழக்கு ஏதும் தொடுக்க ஏலாதே?

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"மருண்டவன் கண்ணுக்கு...." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (10 January, 2005 01:00) : 

அது பெயரிலி ஆனால் அவர் தயாசாந்தகிரி சொன்னதைக் கேட்டுத்தான் இந்து அப்படிச் சொல்லும் என எதிர்வுகூறினார்
ஈழநாதன்

 

said ... (10 January, 2005 03:42) : 

தற்பொழுது அந்த ஊடகங்கள் அந்த செய்தியினை வாபஸ் பெற்றதாக் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் எப்படி பட்ட மனித நேயம் கொண்டவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். அவ்வளவு தான்.

கயல்விழி

 

said ... (11 January, 2005 09:02) : 

சில சமயங்களில் பரபரப்பாக்க வேண்டும் (அ) கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்றே செய்திகள் திரித்தும் பொய்யானதுமாக எழுதுகிறார்கள்.
கடவுள்தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்

 

said ... (23 January, 2005 22:23) : 

அம்மா

 

post a comment

© 2006  Thur Broeders

________________