Tuesday, February 15, 2005

படியெடுத்தலும் பகிடி விடுதலும்...

வணக்கம்.
அண்மைய நாட்களின் தினக்குரல் பத்திரிகையைப் படிக்கையில், சில விசயங்கள் கண்ணுக்குள் குத்துகின்றன. அப் பத்திரிகையின் சில செய்திகள் எழுதப்படும் முறை ஏனோ அன்னியமாய்ப் படுகிறது. அக்குறிப்பிட்ட செய்திகள் இந்தியப் பத்திரிகைகளிலிருந்து அப்படியே படியெடுத்துப் போடுகிறார்கள் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால் எப்படி எம்மிடையே இல்லாத சொற்களைப்பாவித்து செய்திகள் எழுத முடியும். செய்திகளைப் பிரசுரிக்கையிற்கூட வசனங்களை மாற்றித் திருப்பி எழுதிப் போடலாமே (ஜால்ரா அடிப்பது, ஷாக் ஆவது, இன்னபிற). அச்சுப்பதிப்பு எப்படி வருகிறது என்று தெரியவில்லை. இங்கு அது பெற முடியாது. (அதேநேரம் வீரகேசரி என்ன பாடோ தெரியேல.)

இலங்கையில் ஒரு போக்கு இருந்து வருகிறது. அதாவது இந்தியச் சொல்லாடலை அப்படியே பிரதிபண்ணுவது. எங்கேனும் நகைச்சுவை நிகழ்ச்சியென்றால் அதில் வரும் வசனங்களெல்லாம் தமிழகத் தமிழ் உச்சரிப்பாகவேயிருக்கும். பாடசாலை நிகழ்ச்சிகளில் நான் இதை ஏராளமான தடைவ பார்த்திருக்கிறேன். பட்டி மண்டபங்கள் என்றால் நன்றாகக் கதைத்துக்கொண்டிருப்பார்கள், திடீரென யாரையாவது சிரிக்க வைக்கிறேன் பேர்வழியென்று இந்தியத் தமிழில் நகைச்சுவைத்துணுக்குச் சொல்வார்கள். அது பெரும்பாலும் லியோனி பாணியில் அல்லது அதே துணுக்காகக் கூட இருக்கும்.

இவர்கள் தான் இப்படியென்றால், பேர்போன இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர்களும் அடிக்கும் கூத்து மாளாது. நகைச்சுவை நேரம் என்று வந்துவிட்டாலே முழு நிகழ்ச்சியும் இந்தியத் தமிழாக மாறிப்போகும். நான் சர்வதேச ஒலிபரப்பைச் சொல்லவில்லை. அது இந்தியத் தமிழரை மையப்படுத்தி அவர்களின் விளம்பரத்தைக்கொண்டு அவர்களுக்காகவே செய்யப்படும் ஒலிபரப்பு. ஆனால் பண்பலை வர்த்தக சேவைக்கு என்ன நடந்தது. அவர்களுமா இப்படிச் செய்ய வேண்டும். அப்படி ஒலி பரப்பும்போது ஓர் அன்னியத்தன்மை தெரியவில்லையா?

இப்படிச்செய்வதால் மொழி அழிகிறது என்றோ வட்டாரவழக்கு சிதைகிறது என்றோ ஈழத்தமிழ் தேய்கிறது என்றோ சொல்ல வரவில்லை. ஏதோ எழுத வேணும்போல கிடந்தது. அதுதான் எழுதினனான்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"படியெடுத்தலும் பகிடி விடுதலும்..." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (15 February, 2005 01:40) : 

அப்படியா செய்கிறார்கள்? ரொம்பத் தப்பாயிற்றே? குழந்தையின் தேன் சிந்தும் மழலையாம் ஈழத் தமிழை விட்டுத் தமிழகத் தமிழுக்கு விழைவது கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்று ஐயன் வள்ளுவர் இப்போது உயிருடன் இருந்தால் கூறியிருப்பர்.
தெனாலியில் கமலஹாஸனின் ஈழத் தமிழின் வனப்பில் நான் மயங்கினேன். அதை பற்றிப் பேசும்போது ஈழத் தமிழர்கள் இப்படத்தில் கமல் பேசியது உண்மைக்குவந்ததாக இருந்ததா என்றுக் கூறுவீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்

 

said ... (15 February, 2005 01:42) : 

அப்படியா செய்கிறார்கள்? ரொம்பத் தப்பாயிற்றே? குழந்தையின் தேன் சிந்தும் மழலையாம் ஈழத் தமிழை விட்டுத் தமிழகத் தமிழுக்கு விழைவது கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்று ஐயன் வள்ளுவர் இப்போது உயிருடன் இருந்தால் கூறியிருப்பார்.
தெனாலியில் கமலஹாஸனின் ஈழத் தமிழின் வனப்பில் நான் மயங்கினேன். அதை பற்றிப் பேசும்போது ஈழத் தமிழர்கள் இப்படத்தில் கமல் பேசியது உண்மைக்குவந்ததாக இருந்ததா என்றுக் கூறுவீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்

 

said ... (15 February, 2005 09:42) : 

பின்னூட்டத்துக்கு நன்றி டோண்டுää தெனாலியில் கமல் கதைத்த தமிழ் ஓரளவு பரவாயில்லை என்பது என் கருத்து. ஆனால் பலரிடம் காட்டமான விமர்சனம் உண்டு. ஆனால் அது நாடகப்பாணித் தமிழ். கமலே சொல்லியுள்ளார் நாடக ஒலித்தட்டுக்களை கேட்டுத்தான் பயின்றதாக. எனினும் என் கருத்து என்னவென்றால் ஈழத்தமிழர் யாரையாவது குரல் கொடுக்க விடலாம் என்பதுதான். இப்போது பெரும்பாலும் நேரடியாக ஒலிப்பதிவு செய்வதில்லை என்பதால் இது சாத்தியம். ஆனால் தனக்காக இன்னொருவர் குரல் கொடுக்கும் காலத்தையெல்லாம் கமல் தாண்டி வந்து விட்டார் என்றே நினைக்கிறேன்.

 

said ... (15 February, 2005 13:10) : 

சிங்கபூரில் வெளிவரும் 'தமிழ் முரசு' நாளிதழில் கூட நீங்கள் சொன்ன சொல் மாறாது மறு பதிவு செய்வதை பார்த்திருக்கிறேன்.முந்தைய நாள் 'தின கரன்'-ல் வந்த செய்தி அப்படியே அச்சு அசல் மாறாமல் அச்சேறியிருக்கிறது பலமுறை.

 

said ... (21 February, 2005 06:06) : 

நகைச்சுவைக்கு இந்தியத் தமிழைப் பயன்படுத்துவதே பறவாயில்லை என்று சொல்லலாம் (அவர்கள் ஈழத் தமிழை பயன்படுத்துவதுபோல, 'வித்திாயசமாய் பேசும்போது' சிரிப்ப வர்றது நகைச்சவைக்கு நல்லம்தானே!). ஆனால் இங்கே ஈழத் தமிழர்களால் எடுக்கப்படுகிற மூன்று மணி நேர தமிழ் திரைப்படங்களில் (!) இந்தியத் தமிழர்கள்போலவே பேச முயன்று இரண்டுகெட்டான் ஆவதை என்ன சொல்லுறது? படமும் சகிக்காது. தனித்துவமும் இராது..

 

post a comment

© 2006  Thur Broeders

________________