Tuesday, February 15, 2005

நிலாவரை...

டோண்டு மெரினா கடற்கரை பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அத மாதிரி கதயொண்டு (ஆனால் மெரினா விசயம் உண்மையாக இருக்க நிறையவே சந்தர்ப்பம் இருக்கு) எங்கட இடத்திலயும் இருக்கு.

யாழ்ப்பாணத்தில நிலாவரை எண்டு ஒரு கிணறு இருக்குது. கிணறு பெரிய கிணறுதான். எக்கச்சக்கமான வயல்களுக்கு பெரிய பெரிய பம்ப் வச்சு அதிலயிருந்து தண்ணி பாச்சிறவை. ஒருநாளும் அந்தக்கிணறு வத்திறதேயில்ல. அந்தக் கிணறப்பற்றி சில கதையள் எங்கட சனத்திட்ட இருக்கு. அந்தக்கிணத்திண்ட ஆழத்த இதுவரைக்கும் ஆருமே கண்டு பிடிக்கேலயாம். ஆனானப்பட்ட வெள்ளக்காறங்கள் கூட வந்து ஏலாமத்தான் போனவையாம். அப்பிடி ஆஆஆஆஆஆழமான கிணறாம் அது. அத விட முசுப்பாத்தி என்னெண்டா, அந்தக்கிணத்துக்கும் கீரிமலைக்கேணிக்கும் (இது எங்கட சனத்துக்கு ஏறக்குறைய ஒரு புண்ணிய தீர்த்தம்) நிலத்தடியால தொடர்பு இருக்காம். குறுக்கால பாத்தாலும் என்ன ஒரு இருபத்தஞ்சு மைல் வருமே? இல்ல கூடவோ? சரியாத் தெரியேல. ஆனா நிலாவரையில தேசிக்காய் போட்டா (அதுதான் எலுமிச்சை) அது கீரிமலையில மிதக்குமாம். இண்டைக்கும் உந்தக்கத பலமா இருக்கு. இந்தக் கதையப்பற்றி மேலதிகமா ஏதும் தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோவன். பம்பலா இருந்து கேப்பம்.

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"நிலாவரை..." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (15 February, 2005 17:57) : 

தேசிக்காய் என்றால் எலுமிச்சை என்று இன்று தெரிந்தது. நன்றி! மற்றபடி இப்படி சுவரஸ்யமான கதைகள் எல்லாவிடத்திலும் உண்டு.

 

said ... (15 February, 2005 19:03) : 

vasanthan,

Pl. see

http://balaji_ammu.blogspot.com/2005/01/blog-post_31.html#comments

குசும்பு, ம்ம்ம் !!!

 

said ... (16 February, 2005 08:23) : 

வசந்தன்: இலங்கை தமிழும், இந்தியத் தமிழும் ஒரு ஒப்புமை செய்து இருந்த புத்தகம் ஒன்றினை சமிபத்தில் படித்தேன். நீங்கள் எழுதிய விதம் நன்றாக இருக்கிறது. இலங்கைத் தமிழில் உள்ள பல சுத்தமான தமிழ் சொற்களை அறிந்து கொள்ள உங்கள் பக்கம் பாலமாக இருக்கும் என நம்புகிறேன்.

 

said ... (17 February, 2005 01:49) : 

வசந்தன்,


எனது வலைப்பதிவிற்கு வந்ததற்கு நன்றி.


நான் இன்னும் என்ன ஏழுதுவது ஏன்று முடிவு சேய்யவில்லை...


Sorry for switching to english... I am very slow in typing in Tamil...

I want to remove my blog listing from thamizmanam.com. I am not sure how to do it...( better removing it for the time being )

இலங்கைத்தமிழில் இதைப் படிப்பதற்கு நன்றாக இருந்தது.


பிறகு பார்க்கலாம்

 

said ... (04 March, 2005 17:13) : 

vanakkam
Darumu Sivaramuvai (Piramil) Ratnasabapathi Iyer varnitha vidam Darumu - oru Nilavari kinaru - Sujuatha ezuthiyathu Anadha vikatanil. - Mouli
Yennaku appaothu purivavillai eppothu purikirathu

 

post a comment

© 2006  Thur Broeders

________________