பெண்கள் தினம்...
வணக்கம்! இன்று அனைத்துலகப் பெண்கள் தினம்.(இதற்கெல்லாம் வாழ்த்துச் சொல்லலாமா?) வருடா வருடம் வந்து போகும் ஒரு நாள். பெண்களுக்கு இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு நாள் வேண்டும் என்று ஆண்கள் ‘ஜோக்’ அடிக்கக் காரணமான நாள். பெண் விடுதலையைப் பற்றி ஏதாவது கதைப்பது வழக்கம். பெண் விடுதலையென்பது ஆணிலிருந்து விடுபடல் அல்லது ஆண்மையிலிருந்து விடுபடல் என்பது போன்ற தோற்றப்பாடுடைய விவாதங்களிலிருந்து, பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பது வரை பலதரப்பட்ட தளங்களில் பலதரப்பட்ட கோணங்களில் விவாதங்கள் நடந்து விட்டன; நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் கதைத்ததையே திருப்பித்திருப்பிக் கதைக்க வேண்டிய நிலை. இன்னும் எவ்வளவு காலமானாலும் பெண் விடுதலையைப் பற்றிக் கதைப்பதற்கு நிறைய விசயங்கள் இருந்து கொண்டேயிருக்கும் என்பதில் ஐயமில்லை. வலைப்பதியும் நபர்களில் குறிப்பிட்டளவு பெண்கள் இருந்தாலும் இத்தொகை போதாது என்றே நினைக்கிறேன். ஆனாலும் இவர்களிற் பலர் மிகக் காத்திரமான பதிவுகளைத் தருகிறார்கள். இன்னும் நிறையப் பெண்கள் எழுத வரவேண்டும் என்பது என் அவா. இனிவரும் காலங்களில் நிறைவேறும் என்று நம்புகிறேன். இந்நிலையில் விசயம் தெரிந்தவர்கள் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பெண்களைப் பற்றிய பதிவுகளை எழுதலாம். மாலன் செய்துள்ளார். ஈழத்தில் (குறிப்பாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில்) மார்ச்-08 ஐ விட, ஒக்டோபர்-10 இல் வரும் ‘தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்’ இற்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்றைய தினமே பெண்களுக்கான சிறப்புத் தினமாகத் திகழ்கிறது. பெண்ணானவள் அனைத்துத் தளங்களிலும் விடுதலை பெற்று, தான் தானாகவே வாழ ஆசித்து முடிக்கிறேன். Labels: கலந்துரையாடல், பதிவர் வட்டம், விமர்சனம் |
"பெண்கள் தினம்..." இற்குரிய பின்னூட்டங்கள்
பெண்களுக்குச் சரியாசனம் கொடுத்தவன் பாரதி
இன்று அரியாசனம் கொடுத்தவன் பிரபாகரன்.
வணக்கம் அண்ணா அந்த இணைப்பை[மதியின் இணைப்பு என்றீர்களே ] தாருங்கள்.. முயற்சி செய்கிறேன் ஆனால் சின்னபிள்ளைகளை தேடிப்பிடிப்பது தான் கஸ்டமா இருக்கு.
கவிதன்
பரிசோதனை ஒன்று
எழுதிக்கொள்வது: vasanthan
பரிசோதனை 2
22.43 12.3.2005
மேற்குறிப்பிட்ட இரு பின்னூட்டங்களும் எனது பரிசோதனைகள். புதிய பின்னூட்டப் பெட்டிக்கான பரிசோதனைகள்