Wednesday, April 13, 2005

வாழ்த்துச் சொல்ல மாட்டேன்

புதுவருட வாழ்த்துக்கள் என்று பலர் கூறிவிட்டார்கள். நான் கூறப்போவதில்லை. கூறுவதால் ஏதும் குறைந்து விடப்போவதுமில்லை.

உண்மையில் இரு தமிழரின் புதுவருடப்பிறப்புத் தானா? அல்லது தனியே மதத்தோடு மட்டும் சம்பந்தப்பட்டதா? இது பற்றி திராவிடர் கழகம் உட்பட பலர் கூறிவிட்டார்கள். காஞ்சி பிலிம் கூட அண்மையில் ஒரு கட்டுரையைப் போட்டிருந்தார்.

ஈழத்தில் வன்னியில் இது தமிழரின் வருடப்பிறப்பன்று என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதைத் தமிழரின் வருடப்பிறப்பாகக் கருதவில்லை. மாறாக தைப்பொங்கல் தினத்தையே வள்ளுவரின் பிறந்த நாளாகவும் அதையே தமிழ் வருடப்பிறப்பாகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
ஆனால் இது இலங்கையில் சிங்கள, தமிழ் புத்தாண்டு என்றே அழைக்கப் படுகிறது.

உண்மையில் இது பற்றி பூரண விளக்கம் இல்லாமல் இருக்கிறேன். வலைப்பதிவரில் யாராவது விளங்கப் படுத்துவீர்களா?

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"வாழ்த்துச் சொல்ல மாட்டேன்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (13 April, 2005 10:39) : 

தமிழக அரசின் திருவள்ளுவராண்டு என்பது தைப் பொங்கலை கொண்டே தொடங்குகிறது.

 

said ... (13 April, 2005 12:08) : 

எழுதிக்கொள்வது: ellalan

வணக்கமுண்ணே!
அப்படிப் போடுண்ணே அரிவாள!!!

3.46 13.4.2005

 

said ... (13 April, 2005 15:20) : 

எழுதிக்கொள்வது: செந்தூரன்

புதுவருட வாழ்த்துக்கள் வசந்தன்

15.47 14.4.2005

 

said ... (13 April, 2005 17:14) : 

சித்திரை புத்தாண்டை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை.

 

said ... (13 April, 2005 21:51) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

நீங்கள் சொல்வது யோசிக்க வேண்டியது. இன்று நேபாளத்திலும் புதுவருடம் தான்.............அப்ப தமிழருக்புரியதல்லவா............

14.19 13.4.2005

 

said ... (13 April, 2005 22:44) : 

நேபாள மக்களுக்கு என்னுடைய புதுவருட வாழ்த்துக்கள்..

 

said ... (13 April, 2005 23:05) : 

சிங்களவருக்குச் சொல்லேலயோ?

 

said ... (14 April, 2005 01:19) : 

இது யாற்ற புதுவருடம் எண்டுறதிலும் விட எப்ப புதுவருடம் எண்டுறதுதான் கனடாவில் பிரச்சனை. பஞ்சாங்கத்தின் படி எண்டு ஒரு கோயில்ல ஒருநாளும் அது பிழையெண்டு அடுத்த நாள் வேறு ஒரு கோயிலும் புதுவருஷம் கொண்டாடும். இந்தக் கொண்டாட்டங்களைக் கொண்டாடுறதில் தமிழ் மக்கள் ரெண்டாக் கட்சி கட்டிற்றீனம் இங்க. தமிழ் ரேடியோவில உதால சண்டை கூட வாறதுண்டு. எனக்கு தை மாதம் முதலாம் திகதி பிரச்சனை இல்லாமல் வருஷம் பிறக்கும்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________