Saturday, January 07, 2006

புளொக்கர் கணக்கின்றிப் பின்னூட்டமிடுவோருக்கு.

புளொக்கரிலுள்ள பின்னூட்ட முறையினைப் பயன்படுத்தாமல் எழுத்துரு மாற்றி மூலம் பின்னூட்டமளிக்கும் வசதி எனது வலைப்பக்கத்தில் உள்ளது. யுனிகோட்டில் எப்படி தட்டச்சுவதென்று தெரியாதவர்களுக்கு வசதியாக இது அமைக்கப்பட்டது. எழுத்துருமாற்றியாகவும் செயற்படும் இதைப் பலர் சரியாகப் பயன்படுத்துகின்றனர். இருந்தபோதும் சிலர், எப்படிப் பயன்படுத்துவதென்று தெரியாமல் தவறாகப் பின்னூட்டமிடுகின்றனர். ஆகவே தேவையற்ற வகையிற் சில பின்னூட்டங்கள் வருகின்றன. அவற்றிற் பலவற்றை அழித்தும், 'எங்கே வசந்தன் கருத்துச் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக' மற்றவர்கள் நினைத்து விடுவார்களோவென்று பயந்த தருணங்களில் அழிக்காமலும் இருந்துள்ளேன்.

சரியான முறையில் அவ்வசதியைப் பயன்படுத்தாவிட்டால் "undefined" என்ற சொல் மட்டுமே பின்னூட்டமாக வெளிப்படும். எப்போதாவது இருந்துவிட்டு இப்படியான பின்னூட்டங்கள் வந்துகொண்டிருக்கும். இன்று கொஞ்சம் அதிகமாகிவிட்டது. அதற்குக் காரணமும் இப்போதுதான் புரிந்தது.

தினமலரில் இன்று "இலவு காத்த கிளி" பதிவைப்போட்டு, என் வலைப்பக்கத்தின் இணைப்பு வந்துள்ளது. (அதுவும் ஒரு பின்னூட்டத்தின்மூலம் தான் தற்போது தெரியவந்தது).அதன்வழி வந்த புதியவர்கள் பலர் பின்னூட்டமிட முயற்சித்ததன் விளைவுதான் இதுவென்று நினைக்கிறேன். எனவே இவ்வசதியைப் பயன்படுத்திப் பின்னூட்டமிடல் குறித்த சிறுவிளக்கம்.

பின்னூட்டப்பெட்டியின் மேல் இரு தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. "பாமினி", "ஆங்கில உச்சரிப்பில்" என்பனவே அவை. இவற்றில் ஏதாவதொன்றை நீங்கள் நிச்சயம் தெரிவுசெய்துகொள்ள வேண்டும். அல்லாத பட்சத்தில் தான் "undefined" என்ற சொல் பின்னூட்டமாக வரும்.

தெரிவுசெய்தபின் மேலுள்ள பெட்டியில் உங்கள் பின்னூட்டத்தைத் தட்டினால் கீழுள்ள பெட்டியில் அது யுனிகோட் எழுத்துருவாக மாறிவரும். பின் 'பெயர்' என்ற இடத்தில் உங்கள் பெயரையிட்டு "கருத்தைப் பதிவு செய்" என்பதை அழுத்தவும்.

நீங்கள் தெரிவுசெய்யும் முறைக்கேற்பவே பின்னூட்டமும் இடவேண்டும். தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட வேண்டுமானால் எதையும் தெரிவுசெய்யாது, நேரடியாகவே இராண்டாவது பெட்டியில் அங்கிலத்தில் எழுதவும்.

எவ்வளவு பேருக்குப் புரிகிறதோ இல்லையோ சொல்லவேண்டிய கடமைக்குச் சொல்லியாச்சு:-)


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"புளொக்கர் கணக்கின்றிப் பின்னூட்டமிடுவோருக்கு." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (07 January, 2006 21:31) : 

வசந்தன், இந்த undefined பிரச்சனைக்கு பின்வருமாறு தீர்க்க முடியும் என நம்புகிறேன். அதாவது உங்கள் Radio Button களில் ஏதாவது ஒன்றை நீங்களே default ஆகத் தெரிவு செய்யலாம். அதற்கு உங்கள் templateஇல் கீழே உள்ள code இல் checked என்ற சொல்லை இணைத்து விடுங்கள்.

input type="radio" name="whichfont" checked onclick="fonter(this.form)"பாமினி

நான் மேலே பாமினியை default ஆகத் தெரிவு செய்துள்ளேன். பின்னூட்டமிடுபவர்கள் விரும்பினால் ஆங்கில உச்சரிப்பைத் தெரிவு செய்யமுடியும். இதன் மூலம் undefined வருவதற்குச் சந்தர்ப்பமில்லை.

 

said ... (07 January, 2006 23:10) : 

எழுதிக்கொள்வது: SP.VR.Subbiah Email: umayal2005@gmail.com

நல்லது நண்பரே!
இதை மற்ற பிளாக் அன்பர்களும் பயன் படுத்த என்ன செய்ய வேண்டும் என்று தனியாக ஒரு பதிவு செய்யுங்களேன்
எஸ்.பி.வீஆர்.சுப்பையா

18.4 7.1.2006

 

said ... (08 January, 2006 00:36) : 

எழுதிக்கொள்வது: Manian

புதியவர்களுக்கு பாமினி என்றால் என்ன ஆங்கில உccஅரிப்பு என்றால் என்ன என்றும் தெரியவேண்டுமே :(

19.34 7.1.2006

 

said ... (08 January, 2006 01:46) : 

எழுதிக்கொள்வது: Karthikeyan (tamilpoo)

இந்த சேவை ரொம்ப உபயோகமா இருக்கு!!!
எதிர்பதிவு செய்ய நல்ல வாய்ப்பு...

20.33 7.1.2006

 

said ... (08 January, 2006 03:10) : 

பின்னூட்டமிட்டோருக்கு நன்றி.
சிறிதரன்,
உங்கள் யோசனை நல்லதுதான். அதை மாற்றிவிடுகிறேன்.

இம்முறையைப் பலர் தங்களின் வலைப்பதிவுகளில் வைத்துள்ளார்கள். சிலர் பயன்படுத்தி மீண்டும் நிறுத்திவிட்டார்கள். டி.சே, சயந்தன், வன்னியன் போன்றோர் ஒரே நிரலியைப் பாவிக்கிறோம். இதைப் பொருத்துவது வலைப்பதிவாளர்களின் விருப்பமல்லவா?

இவ்வெழுத்துரு மாற்றியைத் தயாரித்தவர்கள் சுரதா கிருபா முதலானோர் என்று அறிகிறோம். நான் பயன்படுத்தும் செயலியைப் பயன்படுத்த யாராவது விரும்பினால் அவர்களுக்குத் தர ஆவலாயிருக்கிறேன்.
------------------------
'பாமினி', 'ஆங்கில உச்சரிப்பு' என்பவற்றைத் தெரிந்து கொள்வது எல்லாவற்றிலும் அதிமுக்கியம்.;-)

 

said ... (08 January, 2006 04:11) : 

எழுதிக்கொள்வது: sg

எழுதிக்கொள்வது: sg

undefined

23.9 7.1.2006

23.9 7.1.2006

 

said ... (08 January, 2006 04:11) : 

எழுதிக்கொள்வது: sg

undefined

23.9 7.1.2006

 

said ... (08 January, 2006 04:31) : 

எழுதிக்கொள்வது: பாலசந்தர் கணேசன்.

ஆக இது ரொம்ப சூப்பர்.மிக அற்புதம். இதை எப்படி என் ப்லொகில் கொண்டுவருவது,

12.51 7.1.2006

 

said ... (08 January, 2006 08:01) : 

எழுதிக்கொள்வது: gulf tamilan

இப்பொழுது சரியகி விட்டது சரியா?

0.21 8.1.2006

 

said ... (08 January, 2006 09:51) : 

எழுதிக்கொள்வது: Mathangi

சோமசுந்தரப்புலவரின் ப்பாடல்களை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றி. பின்னூட்டத்தை எப்படி இடவேன்டும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்

7.12 8.1.2006

 

said ... (08 January, 2006 09:51) : 

எழுதிக்கொள்வது: Mathangi

எழுதிக்கொள்வது: Mathangi

சோமசுந்தரப்புலவரின் பாடல்களை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றி. பின்னூட்டத்தை எப்படி இடவேன்டும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்

7.12 8.1.2006

7.12 8.1.2006

 

said ... (08 January, 2006 10:21) : 

எழுதிக்கொள்வது: pot"tea"kadai

"இவ்வெழுத்துரு மாற்றியைத் தயாரித்தவர்கள் சுரதா கிருபா முதலானோர் என்று அறிகிறோம். நான் பயன்படுத்தும் செயலியைப் பயன்படுத்த யாராவது விரும்பினால் அவர்களுக்குத் தர ஆவலாயிருக்கிறேன்"

- நான் கூட உங்களிடம் கேட்க வேன்டும் என்று ரொம்ப நாட்கலாய் நினைத்துக் கொன்டிருந்தேன். உங்களுடைய உதவிக்கு நன்றி.

எனக்கு கொஞ்சம் சொல்லித் தருகிறீர்களா?

நன்றி,
சத்யா.

10.44 8.1.2006

 

said ... (08 January, 2006 10:23) : 

www.potteakadai.blogspot.com

நன்றி,
சத்யா.

 

said ... (08 January, 2006 13:09) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (08 January, 2006 13:49) : 

பொட்டிக்கடை - சத்யா, பாலசந்தர் கணேசன்,
என்னுடைய முகவரிக்கு மின்னஞ்சல் இடுங்களேன். முகவரி என்பக்கத்திலேயே உள்ளது.

 

said ... (08 January, 2006 14:51) : 

எழுதிக்கொள்வது: asokan

nandraga ullathu indha blog

9.49 8.1.2006

 

said ... (08 January, 2006 15:46) : 

எழுதிக்கொள்வது: தருமி

சொன்னது புரிஞ்சுதோ புரியலையோ, ஒரு தடவை செஞ்சு பாத்திருவோமேன்னு இந்தப் பின்னூட்டம். வந்திருமா..?

10.39 8.1.2006

 

said ... (09 January, 2006 01:10) : 

வந்திட்டுதே தருமி.

பரவாயில்லையே, "உங்களுக்கே" புரிகிறதென்றால் மற்றவர்களுக்கும் புரிந்திருக்கும்.;-D
(சும்மா பம்பலுக்குத்தான்)

இப்போது பாமினியை நியம எழுத்துருத் தெரிவாக்கி விட்டேன்.

 

said ... (10 January, 2006 08:24) : 

எழுதிக்கொள்வது: கானா பிரபா

தம்பி வசந்தன்,
உமது முயற்சியைத்தொடர்ந்து நானும் எனது பதிவில் இதனை இணைத்துள்ளேன் உதவிக்கு நன்றி.

8.50 10.1.2006

 

post a comment

© 2006  Thur Broeders

________________