Thursday, January 05, 2006

இலவு காத்த கிளி - பாடல்

ஒன்றுக்காகக் காத்திருந்து ஏமாந்துபோகும் சந்தர்ப்பத்தைக் குறிக்க இச்சொற்றொடர் பயன்படுத்தப்படுவதுண்டு. சிலர் 'இழவு காத்த கிளி' என்றும் எழுதுவர். ஆனாற் பெரும்பான்மையானோர் இச்சொற்றொடர் உச்சரிப்பில் 'இளவு' என்றே உச்சரிக்கின்றனர். இச்சொற்றொடர் உணர்த்தும் கதையைப் பார்ப்போம்.

கிளியொன்று இலவமரத்திற் குடியிருந்தது. ஒருநாள் அம்மரத்தில் அரும்பு கட்டியது. அதைப்பார்த்த கிளி, 'இது பூவாகி, பிஞ்சாகி, காயாகி, பின் கனியாகும்போது இதை உண்பேன்' என்று தனக்குட் சொல்லிக் கொண்டது. தனக்குள்ளேயே அதை உண்பது தொடர்பான ஆசையை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டது. ஒருநாள் அந்த இலவங்காய் நிறம்மாறிப் பழுக்கத் தொடங்கியது. உடனே கிளி, தன் இனசனத்துக்கெல்லாம் சொல்லி வரவழைத்து பெரிய விருந்து கொண்டாட நினைத்தது. அதன்படி அழைப்பும் அனுப்பிவிட்டுக் காத்திருந்தது. இனசனமும் வந்தது. பழத்தை உண்ணும் கனவிலிருந்த கிளிக்கு பேரிடி விழுந்தது. இலவம் பழம் வெடித்து, பஞ்சு பறந்தது. கிளி மட்டுமன்றி அதன் இனசனமும் ஏமாற்றமடைந்தது.

இந்தக் கதை வெவ்வேறு வடிவங்களில் இருக்கலாம். தெரிந்தவர்கள் மாற்றுக்கதைகளைச் சொல்லலாம்.

தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர், இலவு காத்த கிளியைப் பாட்டிற் சொல்லியிருக்கிறார். அதை இங்கே பதிவாக இடுகிறேன்.

*பொதுளி - நிறைந்து
---------------------------------

செந்தீயின் நாப்போலச் செழுந்தளிர்க ளீன்று
திருமாலின் நிறம்போலப் பசியதழை *பொதுளி
நந்தாத நெடுந்தெருப்போற் கிளைகள்பல வோச்சி
நடுக்கட்டி லோரிலவ மரம்வளர்ந்த தன்றே


மஞ்சுதொட வளர்ந்துவந்த விலவமர மதனில்
மரகதமா மணிபோலப் பசுமைநிறம் வாய்ந்த
கொஞ்சுமொழிக் கிஞ்சுகவா யஞ்சுகமொன் றினதே
குடியிருந்து நெடுநாளாய் வாழ்ந்துவந்த தன்றே


அங்கொருநா ளிலவமர மரும்புகட்டக் கண்டே
அலராகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியும்
இங்கிதனைக் கவ்வியெடுத் தென்காலே கரமாய்
ஏந்திமகிழ்ந் தேபுசிப்பே னெனநினைந்த தன்றே


காலையிலே யெழுந்துசெயுங் கடமைகளை முடித்தே
கடவுளடி கைதொழுது கதிரெடுக்கப் போகும்
மாலையிலே திரும்பிவந்து மற்றதனைப் பார்த்து
வாயூறிக் கனியாக வரட்டுமென மகிழும்


எண்ணுமலர் பிஞ்சாகிக் காயாகித் தூங்க
இனியென்ன பழுத்துவிடு மெடுத்துண்பே னென்றே
கண்ணையிமை காப்பதுபோல் நாடோறும் நம்பிக்
காத்துவந்த திரவுபகல் காதலித்துக் கிளியே


வறியதொரு மகன் குதிரைப் பந்தயத்திற் காசு
வந்துவிழும் வந்துவிழு மென்று மகிழ்வாக
பிறிதுநினை வொன்றுமின்றி யாசைமிகு கிள்ளைப்
பிள்ளைமகிழ்ந் திருந்ததங்கே பேணியதைப் பார்த்தே


நன்றுவரும் பழமெடுத்து நானுமின சனமும்
நயந்துவிருந் தருந்துகின்ற நல்லபெருந் திருநாள்
என்றுவரு மின்றுவரும் நாளைவரு மென்றே
எண்ணியிருந் ததுமலடு கறக்கவெண்ணு வார்போல்


பச்சைநிறம் மாறியந்தப் பழம்பழுத்த போது
பைந்தார்ச்செம் பவளவிதழ்ப் பசுங்கிளியும் பார்த்தே
இச்சையுடன் தன்னுடைய வினசனத்துக் கெல்லாம்
என்வீட்டிற் பழவிருந்து நாளையென வியம்பி


துஞ்சாது விழித்திருந்தே யதிகாலை யெழுந்து
சொல்லிவைத் தோரையுங் கூட்டிவரும் போது
பஞ்சாகிக் காற்றுடனே பறந்ததுவே வெடித்துப்
பைங்கிளியார் போற்றிவந்த முள்ளிலவம் பழமே

அந்தோவக் கிளியடைந்த மனவருத்தமெல்லாம்
அளவிட்டுச் சொல்லமுடி யாதுவிருந்த தாக
வந்தகிளை மிகநாணி வெறுவயிற்றி னோடு
வந்தவழி மீண்டதுவே சிந்தைபிறி தாகி


உள்ளீடு சிறிதுமில்லாப் பதர்க்குவையை நெல்லென்
றுரலிட்டுக் குத்தவெறு முமியான வாபோல்
இல்லாத பயன்விரும்பி ஏமாந்த பேரை
இலவுகாத் திட்டகிளி யென்பருல கோரே.

----------------------------------
நன்றி: சோமசுந்தரப் புலவர் - சிறுவர் பாடல்கள்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"இலவு காத்த கிளி - பாடல்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

Anonymous Anonymous said ... (06 January, 2006 01:04) : 

எழுதிக்கொள்வது: VASANTHAN

undefined

8.33 5.1.2006

 

Anonymous Anonymous said ... (06 January, 2006 01:05) : 

UNNAKUU ELLAM CUT AND PASTE THANNN SONTHAMAHA SAIYAVUMM DON'T COPY FROM OTHERS

DON'T ACT LIKE SMART

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (06 January, 2006 01:52) : 

அநாமதேயமா வந்து அரிய கருத்துக்கள் சொன்னவரே!
வேற ஏதோ பிரச்சினையில வந்து உளறுறீங்களெண்டு விளங்குது.

அதுசரி, உங்கட பேரைப்போட்டே கருத்தெழுதலாம். அல்லது அநாமதேயமா எண்டாலும் எழுதலாம் (அதுக்குத்தானே வசதியள் விட்டிருக்கு?). ஆனா என்ர பேரையே போட்டு பின்னூட்டம் எழுத வெளிக்கிடுறியளே, இது நியாயமா? அல்லது உங்களுக்கும் வசந்தன் தான் பேர் எண்டு சொல்லப்போறியளோ?

 

Anonymous Anonymous said ... (06 January, 2006 04:36) : 

எழுதிக்கொள்வது: P.V.Sri Rangan

அருமையான பாடல்!

19.0 5.1.2006

 

Blogger இளங்கோ-டிசே said ... (06 January, 2006 07:11) : 

பாடலுக்கு நன்றி வசந்தன். பறந்துபோன கிளியைப் பார்த்து இலவு காத்த காளையாகிப்போன உம்மட அந்தக்காலத்துக் கதையையும் ஒருக்கா எடுத்துவிடுமன் :-).

 

Anonymous Anonymous said ... (06 January, 2006 11:58) : 

எழுதிக்கொள்வது: asokan

ungal blog romba nalla irukku

6.56 6.1.2006

 

Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said ... (06 January, 2006 14:19) : 

//பறந்துபோன கிளியைப் பார்த்து இலவு காத்த காளையாகிப்போன உம்மட அந்தக்காலத்துக் கதையையும் ஒருக்கா எடுத்துவிடுமன் :-).//

இது பின்னூட்டம்!!! :O)

"பேரைச் சொல்லடி" பதிவுக்கான முன்னோட்டம் என்டு இந்தப்பதிவை எடுத்துக்கொள்லலாமோ வசந்தன்? ;O)

 

Blogger சயந்தன் said ... (06 January, 2006 14:50) : 

//இலவு காத்த காளையாகிப்போன உம்மட அந்தக்காலத்துக் கதையையும் ஒருக்கா எடுத்துவிடுமன் :-). //

அதுக்குதானே நான் இருக்கிறன்! நாளையோடை நாடகம் முடியுது! பிறகு பாருங்கோவன்!

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (06 January, 2006 22:51) : 

சிறிரங்கன், டி.சே, ஷ்ரேயா, ஆசோகன்,
கருத்துக்களுக்கு நன்றி.

என்னைச் சிக்கலில மாட்டத்தான் நிக்கிறியள் போல.
காளையை ஓடவிட்ட கிளிகளின் கதைகளில உங்களுக்கு விருப்பமில்லையோ?

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (07 January, 2006 02:33) : 

அடப்பாவிச் சயந்தன்,
சும்மா இருக்க விடமாட்டியளே?
அடுத்தமுறை கடற்கரைக் கலவரத்தில கவனமாயிரும்.

 

Anonymous Anonymous said ... (07 January, 2006 07:50) : 

//நாளையோடை நாடகம் முடியுது! பிறகு பாருங்கோவன்!//
அப்ப சயந்தனை இண்டைக்கு உக்ரேனியன் ஹோலிலை பார்க்கலாம்.

 

Anonymous Anonymous said ... (07 January, 2006 12:22) : 

எழுதிக்கொள்வது: loganathan

undefined

7.21 7.1.2006

 

Anonymous Anonymous said ... (07 January, 2006 12:35) : 

எழுதிக்கொள்வது: loganathan

அருமயனா கவிதை
மறந்து போன கருத்தை அறியப்படுத்தியதற்க்கு

7.24 7.1.2006

 

Anonymous Anonymous said ... (07 January, 2006 18:31) : 

எழுதிக்கொள்வது: a sheik allaud din

undefined

13.28 7.1.2006

 

Anonymous Anonymous said ... (07 January, 2006 20:04) : 

உங்க வலைப்பக்கம், தினமலரில் வந்திருக்கு. பாத்தீங்களா?

http://www.dinamalar.com/2006jan07/flash.asp

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (07 January, 2006 20:30) : 

கருத்திட்டவர்களுக்கு நன்றி.
பலர் எப்படிக் கருத்திடுவதென்று தெரியாமல் பின்னூட்டமிட்டுள்ளார்கள். அதுபற்றி இப்போது தனிப்பதிவொன்று இட்டுள்ளேன்.

தினமலரில் பதிவு வந்ததைத் தெரியப்படுத்திய அநாமதேய நண்பருக்கு நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________