கங்காரு பாக்கலாம் வாங்க...
என் வாசகி ஒருத்தி கங்காரு படம் போடச்சொல்லி ஒரே அரிண்டம். திருப்பத் திருப்பக் கேட்டபடியாலும், கங்காரு நாட்டில இருந்து கொண்டு அதப் போடாமல் விடுறது சரியில்ல எண்டதாலும் இந்தப் படங்களப் போடுறன். ரெண்டு கால்களையும் தூக்கிய நிலையில் கங்காரு. கங்காரு கவனம் என்ற வீதியெச்சரிக்கைப் பலகை. இவற்றில் திருப்தி வராதவர்கள் இங்கே போய்ப் பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றுக்காக யாருக்காவது என்னைப் பாராட்டவோ வாழ்த்தவோ தோன்றினால், என்னை நச்சரித்த அந்த ‘நிலவு’க்குத் தான் அவைபோய்ச் சேரும். -------------------------------------------- வந்ததுதான் வந்தீர்கள். அப்பிடியே ஊடகவியலாளன் 'மாமனிதன்' சிவராமின் கொலைக்கு நீதியான விசாரணை தேவையென மனித உரிமைகள் ஆணையகத்துக்கு முறையிடும் மனுவில் உங்கள் பொன்னான வாக்குகளையும் போட்டுச் செல்லுங்கள். இங்கே சென்று வாக்குப்போடுங்கள். Labels: நட்சத்திரக் கிழமை, படம் |
"கங்காரு பாக்கலாம் வாங்க..." இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: ஷ்ரேயா
இது இலங்கைக் கங்காரு போல! :o)
14.18 2.5.2005
ஆஹா, இந்த வாரம் நட்சத்திரம் நீங்களா! இதேப் போல எலி, எறும்பு, கரப்பான்பூச்சி, பல்லி போன்றவற்றையும் பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ;-)
எழுதிக்கொள்வது: kulakaddan
ஆகா வசந்தன் தொடங்கிரட்டையா..............ம் ம்
8.26 2.5.2005
இந்தியன் படத்தில் 'டெலிஃபோன் மணி போல்' பாட்டில் வந்தவைகளைப் போல் எதுவுமே இல்லையே..!! என்னங்க இதெல்லாம்??
எழுதிக்கொள்வது: சந்திரமதி கந்தசாமி
அட! அட!!
கங்காரு என்னமா ஜொலிக்குது!
நிலவே முகங்காட்டு எண்டு கேக்காம, நாய், பன்னி, குரங்கு[ச்சே! அது கார்த்திக் ராமாஸுக்குப் போயிருச்சோ? ;) ] *கங்காரு* எண்டு ஏதாவது படத்தை அனுப்பும் என்று என்று கேட்ட என்னை ஏமாற்றாமல் கங்காரு படம் * காட்டிய * நிலவே நீ வாழ்க!!!
விடிய வெள்ளன, எழும்பின கையோட இப்படிச் சிரிக்க வச்சதுக்கு நன்றி நிலவு. பொறுத்தமான படத்தைத் தேடிப்பிடிச்சுப் போட்டதுக்கு ஒரு சபாஷ்.
====
ஒரு சின்ன சந்தேகம். போன பதிவில 'நிலவு' பற்றின *வியாக்கியானம் * பாத்தனான். இப்ப என்னையும் 'நிலவு' எண்டு கூப்பிட்டிருக்கிறீர். ஏதாவது சொல்ல வாறீரோ?
:மோவாயில் விரலை வைத்தபடி யோசனையில்:
டபிள் நிலவு
5.55 2.5.2005
இவை கங்காருகள் தான் என நானும் வழிமொழிகிறேன்..
அட!
உங்கட பேரே நிலவு தானே? (கந்தசாமிய விட்டா).
வாருமையா சயந்தன். எனக்கு ஆட்பலம் இருக்கெண்டத நிரூபிச்சிட்டீர். ஆனா இது மெல்பேர்ண் கங்காரு. சிட்னியில இருக்கிறவைக்கு இது இலங்கைக் கங்காரு மாதிரித்தான் தெரியும்.
மீனாக்ஸ்!
மெல்பேர்ண் 'மணிகளையும்' 'மலர்களையும்' போட்டால் கிளுகிளுப்பாயிருக்கும். ஆனா என்ர பக்கம் வேற மாதிரி அர்த்தப்பட்டிடும். (அல்வாசிட்டி பாட்டுக்குப் பொருள் சொன்னமாதிரி)
நரைன்!
நீங்கள் சொன்னதுகள இங்க தேடிப்பிடிக்கிறது கஸ்டம். அதுகள் எடுக்கக்கூடிய நிலையிலயிருக்கிற நீங்கள்தான் போட வேணும்.
ஆனா மதி!(கானா மதி?)
சந்தடிசாக்கில செர்ரிப்பூவ கவிட்டதுக்கு என்ர ஆட்சேபனை.
குளக்காட்டான்!
என்ன இது வடிவேலு மாதிரி?
எழுதிக்கொள்வது: kulakaddan
வசந்தன் தப்பா நினைக்காட்டில் சரி.பதிவ பாத்ததோட வந்த சிரிப்பு சிரிப்போட எழுதினது.
13.36 2.5.2005
என்னமோ போங்க... கங்காருவைப் பார்க்க உங்க ஞாபகம்தான் வருகுது வசந்தன். (ஒருவேளை பழைய அறுவையோ?) அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். நீங்கள் அவுஸ்ரேலியாவில் வசிப்பது ஒரு முக்கியமான காரணம். நீங்கள் போட்ட இணைப்பில் உள்ள கங்காருவைப் பார்த்ததும் இன்னொரு காரணம் உண்மையானது. அதைச் சொல்லி ஏன் வீண் பகையைச் சம்பாதிப்பான்?
:))
யோவ் கிஸோ!
என்ன காரணமெண்டதச் சொல்லுமப்பா. பிரச்சினையில்ல
எழுதிக்கொள்வது: Anonymous
test
6.12 3.5.2005
அணிலா கங்காருவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எழுதிக்கொள்வது: டிசே
//இவற்றில் திருப்தி வராதவர்கள்
இங்கே போய்ப் பார்த்துக்கொள்ளுங்கள்//
ஏன் உங்களது படத்தை முன்பக்கத்தில் போடாமல், இணைப்புக்கொடுத்துப் பார்க்கச் சொன்னீர்கள் :-)?
21.43 2.5.2005
டோண்டு!
என் படைப்புத்திறனை இப்படிக் கேலி பண்ணக்கூடாது.
டி.சே.!
உமக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை.
நான் கேலி செய்யவில்லை வசந்தன் அவர்களே. கங்காருவுக்கு வால் இந்த மாதிரி புஸு புஸுவென்றிருக்காது. கங்காருவின் படத்துக்கு இங்கு பார்க்கவும்
http://images.google.com/images?q=kangaroo&hl=en&btnG=Search+Images
அன்புடன்,
டோண்டு ராகவன்
வசந்தன் இதோ நான் பார்த்த கங்காரு
ஐயோ செல்வராஜ், உங்களுக்குத் திடீரென்று ஏனிந்தச் சந்தேகம்???
நம்ம தமிழ் மக்களின் நகைச்சுவை உணர்வு கொஞ்சம் அப்படி இப்படித்தான். ஆனாலும் இந்தப் பின்னூட்டம் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
-மதி
பி.கு.: உங்கள் பதிவு சூப்பர். இப்படியொரு பதிவு எழுத வைத்தற்கு வசந்தனின் 'கங்காரு'விற்கு நன்றி சொல்ல வேண்டும்.
எனக்கென்னமோ அந்த ரெண்டாவது படத்தில் இருப்பது வசந்தனின் குளோனோ, ட்வின்னோ, நெருங்கின சொந்தமோ, நண்பனோ என்று ஒரு சந்தேகம். அப்படியொரு பார்வை பார்படுது!
(முன் ஜாக்கிரதையாக ஒரு ஸ்மைலியை இங்கே போட்டுவைக்கிறேன்)
-மதி
டோண்டு!
நீங்கள் தந்த இணைப்பின் முதற் பக்கத்திலேயே நான் தந்த இணைப்பிலுள்ள படமும் வந்துள்ளது கவனித்தீர்களா?
செல்வராசுவுக்கும் சேர்த்து:
பின்னூட்டத்தில் பாருங்கள். அவ்வளவு பேரும் ஆமாம் என்று தலையாட்டிவிட்டுப்போக நீங்கள் ரெண்டுபேர் மட்டும் என்னத்துக்கு ராத்துறியள்? (ரவுசு).
அப்ப உங்கள் ரெண்டு பேரிட்டயும்தான் ஏதோ பிழை இருக்க வேணும். என்ன நான் சொல்லுறது?:D
மதி!
என்னைத் தெரியுமோ உங்களுக்கு?
எங்க பாத்தனியள்?
இல்லீங்க மதி! எனக்குப் புரிஞ்சுது. இருந்தாலும் கங்காருன்னு பார்க்கவே நீங்க சொன்ன மாதிரி அந்தப் பதிவு போட உசுப்பி விட்ட மாதிரி இருந்தது. அதான். அப்புறம் நானும் தான் ஒரு சிரிமூஞ்சி (smilie!) போட்டிருந்தேனே என் பதிவில.
அப்புறம் வசந்தன். என் பிழையாவே போகட்டும். போட்டதே போட்டீர் - படத்த சுட்டுப் பேர் மாத்தி இருக்கலாம். squirrel.jpgனே ரெண்டு பேரும் இருக்கே. தரவிறங்க நேரமாகிக் காட்டி வேற குடுக்குது! அப்புறம் எப்படி நம்புறது? :-)