Tuesday, April 26, 2005

ரஜனியின் விஸ்வரூபம்

சந்திரமுகியில் தலைவர் பின்னியெடுத்திருக்கிறார். ரஜனி படத்துக்குரிய அத்தனை சூத்திரங்களையும் உள்ளடக்கி (அரசியல் உட்பட) வெளிவந்து சக்கை போடு போடுகிறது சந்திரமுகி. ஏறத்தாழ 3 வருடங்களின் பின் வரும் படமிது. பாபா படத்தோல்வியில் துவண்டிருந்த ரசிகர்களுக்கு நல்ல தீனி. எல்லோரும் ‘ஜென்ம சாபல்யம்’ அடைந்து விட்டார்கள். பிறவிப் பயனை அடைந்த அவர்களின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்தாலே புரியும். இனி படத்திற்கு வருவோம்.

திரைக்கதை அழகாக அமைக்கப்பட்டுள்ளது. மணிச்சித்திரதாழின் படி தானென்றாலும் அருமையாக கதை பின்னப்பட்டுள்ளது. அழகான படியெடுப்பாளன் என்ற பட்டம் வாசுவுக்குத் தரலாம். ரஜனி பின்னியெடுத்திருக்கிறார். அவர் அறிமுகமாகும்போது சருகுகள் அந்தரத்தில் நிற்பது அழகான ‘சூப்பர்’ கற்பனை. அறிமுகக் காட்சியில் அவர் ஆட்களைத் துவைத்தெடுப்பது கலக்கல். பிரபுவும் நடித்திருக்கிறார். அடிக்கடி அவர் சீரியசாகக் கதைக்கும்போது எல்லோரும் சிரிக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை.

வடிவேலு நகைச்சுவைக்காக வருகிறார். ஆனால் நிறைய காட்சிகள் அருவருப்பாக இருக்கின்றன. நாசர் ஒப்புக்கு நடித்துள்ளார். படம் முழுவதும் ரஜனி ஆதிக்கம் தான். ஜோதிகா கடைசி 30 நிமிடங்களில் தான் யாரென்று நிருபிக்கிறார். அழகான ஆக்ரோசமான நடிப்பு. சந்திரமுகியின் ஆவி புகுந்த பின் அவரின் நடிப்புத்திறன் ‘சூப்பர்’.

இசை பரவாயில்லை ரகம். தேவுடா பாட்டு வழமையான ரஜனியின் அறிமுகப் பாட்டுக்கள்(opening song) போல் வரவில்லை. படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் வருகின்றன. அறிவியல் உண்மைகளின் படிதான் எல்லாக் காட்சிகளும் போகிறது என்று சொல்ல முடியாது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அறிவியல் உண்மைகளை எதிர்பார்க்க முடியாது. இதில் மிகை நடிப்பு இருப்பதாகவும் சொல்ல முடியாது. ஆனால் இருப்பதாகப் படுகிறது. மிகக் கவனமாக மூடநம்பிக்கை பற்றிய விமர்சனங்களிலிருந்து தப்புகிறது. ஆனால் மூடநம்பிக்கை ரசிகர்களையும் திருப்திப்படுத்துகிறது. அது எப்படி சாத்தியப்படுகிறது என்பதில்தான் நெறியாள்கையின் (டைரக்சன்) திறமை உள்ளது. உண்மையில ஆவி இருப்பதாகச் சொல்லப்படுகிறதா? அல்லது அதெல்லாம் பொய், வெறும் ‘பிளவாளுமை’ என்று சொல்லப்படுகிறதா? தீர்மானமாச் சொல்ல முடியாது. நல்ல பட்டிமன்றம் ஒன்றுக்கான அருமையான தலைப்பு.

படத்தில் ஒரு பாம்பு காட்டப்படுகிறது. அது ஏன் என்று பலரும் குழம்புகிறார்கள். அதில்தான் படத்தின் மையமே இருக்கிறது. அதை பலவிதமான வாசிப்புக்கு உட்படுத்தலாம். எப்படியெப்படி வாசிக்கலாம் (பாக்கிறதைத் தான் சொல்லிறன்) என்பதை நான் இங்கே சொன்னால் சுவையில்லை. உங்களின் அனுமானத்துக்கே விட்டுவிடுகிறேன்.

மேற்குறிப்பிட்டவைகள் அனைத்தும் உண்மையா என்பதை இனி படம் பார்க்கும்போதுதான் தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்ப இன்னும் படம் பார்க்கவில்லையா? என்று கேட்கிறீர்களா?
இல்லை. படம் பார்க்கவில்லை.
பிறகெப்படி இவ்வளவும் எழுதப்பட்டது? என்று கேட்கிறீர்களா?
தமிழ்மணத்தில் சந்திரமுகி பற்றி எழுதப்பட்ட பதிவுகளில் பொறுக்கியைவதாம். மேற்கூறியவைகள் எவையும் என் கருத்துக்களே அல்ல.
அப்போ ஏன் எழுதப்பட்டது? என்று கேட்கிறீர்களா?
அதுதான் முக்கியமே. இப்போது கொஞ்ச நாட்களாக எழுத முடியாமல் நிறைய வேலை. பரீட்சைகள் வேறு நெருங்கி வருகிறது. கொஞ்ச நாளா எழுதுவதில்லை என்று இருந்த நான் திடீரென்று அவசர அவசரமாக இந்தப் பதிவை எழுதுகிறேன். ஏனென்றால்;

சந்திரமுகி பற்றி நாலு வார்த்தை எழுதாவிட்டால் எங்கே நாம் தொலைந்து போவோமோ, மறக்கடிக்கப்பட்டு விடுவோமோ, தனித்துப் போய்விடுமோ என்று எழுந்த பயத்தில், கும்பலில் கோவிந்தாவாக கோசம் போட்டு எழுதின பதிவுதான் இது.
என்னையும் உங்கள் ஆலாபனையில் சேர்த்துக்கொள்வீர்கள் தானே.
சந்திர முகிக்கு ஒரு ஓ............

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"ரஜனியின் விஸ்வரூபம்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (26 April, 2005 11:56) : 

வாசிக்கத்தொடங்கினவுடனேயே உம்மட கடைசிக்குசும்பை ஓரளவுக்கு நான் ஊகித்துக்கொண்டன்.ஆனாலும் சந்திரமுகியில ரஜினி பேசாத பஞ்ச் வசனத்துக்கு குறையில்லாம இந்தப்பதிவைப்போடலாம்.அந்தளவுக்கு தமிழ்மணத்தில இந்த விழர்சனத்தொல்லை கூடிப்போச்சு.

பெடிச்சியிண்ட கவிதை எதிரப்பு இயக்கம் மாதிரி சந்திரமுகி விமர்சன எதிர்ப்பு இயக்கம் ஒண்டை தமிழ்மணத்தில தொடங்கினாத்தான் சரி போல கிடக்கு.தாங்கமுடியல்லடா சாமி....!

அது சரி படத்தை பாத்திட்டு நீங்கள் திருப்பி விமர்சனம் எழுதமாட்டீங்கள் தானே.

(கனகாலத்துக்கு பிறகு பதிவு எழுதினது "யாரால?")

 

said ... (26 April, 2005 14:10) : 

வசந்தன், உங்கள் கிண்டல் நன்று. ரசித்தேன்!

 

said ... (26 April, 2005 16:54) : 

எழுதிக்கொள்வது: http://uyirvaasam.blogspot.com

சந்திரமுகி கனவிலை பரீட்சையை மறக்காமல் படியுங்கோ . சந்திரமுகியை பரீட்டை முடிய பாக்கலாம்.

அன்புடன் சாந்தி


9.21 26.4.2005

 

said ... (26 April, 2005 18:51) : 

http://in.rediff.com/movies/2005/apr/26tamilbo.htm

 

said ... (26 April, 2005 22:48) : 

அப்டிப் போடுய்யா அருவாள. இவங்க இம்ச தாங்க முடியல. நானும் சீக்கிரமா இதுபத்திப் பதிவொண்ணு போடனும். இல்லேன்னா தமிழ்மணத்தவிட்டே தூக்கினாலும் தூக்கிப்புடுவாங்க.

 

said ... (26 April, 2005 23:14) : 

வசந்தன் நீங்கள் வெறும் வேஸ்ட்டு. ரஜனியின் (சு10ப்பர் ஸ்டாரின்) படத்தை இன்னும் பார்க்காமல் என்ன படிப்பு வேண்டிக்கிடக்குது. பிறந்த பலனை அனுபவியும் முதல் பிறகு உம்மட படிப்பை பாரும்.

 

said ... (27 April, 2005 07:37) : 

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
அருணன்!
//கனகாலத்துக்கு பிறகு பதிவு எழுதினது "யாரால?"?//
நிச்சயமா சநதிரமுகியாலதான். ஆர் கண்டது எனக்கும் ஆவி தொத்தீட்டுதோ?
அனாமதேயம்!
ஏன் அந்த இணைப்பைத் தந்தனியள் எண்டு ஒருக்காச் சொல்ல ஏலுமே?
மற்றும் ரோசா, கறுப்பி, மஸ்ட் டூ, சாந்திக்கும் நன்றி.

 

said ... (28 April, 2005 06:10) : 

அன்புள்ள வசந்தன்,

உங்க இமெயில் விலாசம் எழுதுங்கோ.
என்னுடையது
tulsigopal@xtra.co.nz

enRum anbudan,
akkaa

 

said ... (13 February, 2007 11:56) : 

//பரீட்சைகள் வேறு நெருங்கி வருகிறது. கொஞ்ச நாளா எழுதுவதில்லை என்று இருந்த நான் //உருப்படியாப் படிச்சு பாஸ் பண்றதை விட்டுப்போட்டு சந்திர முகியும், சூரியமுகியுமெண்டுகொண்டு.-பகிடிக்கு.

Good Luck for your exam.

 

said ... (13 February, 2007 15:41) : 

வருகை தந்து கருத்துச் சொன்னவர்களுக்கு நன்றி.
_________________________
செல்லி,
இந்தப்பதிவு எழுதி ரெண்டு வருசம் ஆகப்போகுது.
புதுசாக ஒரு பதிவு எழுதப்போக தவறுதலாக இந்தப்பதிவு தமிழ்மணத்தில திரட்டப்பட்டிட்டுது.
புதுப்பதிவு அடியில வந்திட்டுது.

எண்டாலும் வருகைக்கும் கரிசனைக்கும் நன்றி.

 

said ... (24 March, 2008 13:08) : 

பரிசோதனைப் பின்னூட்டம்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________