Monday, May 02, 2005

நட்சத்திரமாகவன்றி, நிலவாக…

பிறை - ஒன்று. (மாயம்)
உங்கள் சுமைகளைப் போக்கவன்று, மேலும் சுமத்தவே வந்தேன்.
உங்களை விடுவிக்கவன்று, மேலும் அடிமையாக்கவே வந்தேன்.


வணக்கம்!
இராம.கி. உங்களெல்லோருக்கும் நாள் காட்டியிருந்தார். இப்போது அல்லவாசிட்டி விஜய் அல்வா காட்டி முடித்திருக்கிறார். நானும் இந்தக் கிழமை முழுவதும் உங்களுக்கு ஒன்றைக் காட்டப் போறன். அதுதான் வெள்ளி.
ஓம், வெள்ளி காட்டப் போறன்.
என்ன... வெள்ளி பாக்க எல்லாரும் தயாரா?


என்னை இந்த வார நட்சத்திரம் எண்டு சொல்லீச்சினம்.
நட்சத்திரமா இருக்கிறது எனக்குப் பிடிக்கேல.
நிலவாக இருக்கத்தான் விருப்பம்.

நட்சத்திரங்களுக்குத் தனித்தன்மை இல்ல.
எண்ணிக்கையில எக்கச்சக்கமா இருக்கு, எண்ணவே ஏலாத அளவுக்கு.
ஆனா நாங்களறிஞ்ச நிலவு ஒண்டுதான்.
மனுசருக்கு இருக்குற நிலவு ஒண்டே ஒண்டுதான்.
அதால நிலவா இருக்க ஆசப்படுறன்.

நட்சத்திரங்கள் சுயமானதாம்.
சுயமா ஒளி கொண்டவையாம்.
யாரிட்டயும் இரவல் வேண்டிறேலயாம்.
ஆனா நிலவு சுயமில்லாததாம்.
ஒண்டுமேயில்லாத வெறும் உருண்டையாம்.
வெளிச்சத்த வேற இடத்திலதானாம் வேண்டுறது.
சீ…. நட்சத்திரமா இருக்கிறதும் ஒரு வாழ்க்கையோ?
ஒருத்தரிட்டயும் ஒண்டுமே இரவல் வாங்காமல், இருக்கிறதையும் மற்றாக்களுக்குக் குடுத்துக்கொண்டு (அது குறையாட்டியும்) இருக்கிற “முட்டாள்” நட்சத்திரமா இல்லாமல், இரவல் வேண்டியே பிழைப்பு நடத்திற,அந்த இரவல் வெளிச்சத்த மட்டுமே வச்சு பிழைச்சுக் கொள்ளிற நிலவாத் தான் நான் இருக்க ஆசப்படுறன்.

நிலவில ஒண்டுமில்லயாம்.
தண்ணி, காத்து, புல்பூண்டு, உயிரினம் எண்டு ஒண்டுமே இல்லயாம்.
கல், மண், தூசியத் தவிர எதுவுமே இல்லயாம்.
அவ்வளவு “சுத்த வேஸ்ட்” ஆக இருந்து கொண்டு,
இவ்வளவு தூரத்துக்கு தன்னப் பற்றின புகழையும் மாயையையும் தோற்றுவித்த நிலவை;

ஆனானப்பட்ட மனுச வர்க்கத்தையே யுகம் யுகமா ஏங்க வச்சு,
கோடிக்கணக்கில சிலவழிக்க வச்சு,
தன்னில காலடி பதிக்க வச்சு,
அந்த நிகழ்ச்சியை “மானுடத்தின் மாபெரும் பாய்ச்சலாக” பிதற்ற வச்ச அந்த “ஒண்டுமில்லாத நிலவின்ர திறமையை;

மனுச இனம் தோன்றினதிலயிருந்தே தன்னைப்பற்றிக் கவித கவிதயா காவியங்களாக் கொட்ட வச்சு,
நிலவில்லாமல் காதலில்ல, காதலில்லாமக் கலவியில்ல, கலவியில்லாமல் மனித குலமேயில்ல எண்டு கோட்பாட உருவாக்கி,
அதன்படி நிலவில்லாம மனிதனில்ல எண்ட “வெளிப்படை உண்மையை” வெளியிட்ட அந்த “சுத்த வேஸ்ட்” நிலவின்ர சமயோசிதத்தை;

நான் விரும்புகிறேன். நல்லா ரசிக்கிறேன்.

ஒண்டுமில்லாமலே இருந்து கொண்டு, ‘தானில்லாமல் ஒண்டுமில்ல’ எண்ட நிலைமையை உருவாக்கின அந்த நிலவு,
எல்லாம் இருந்தும் ஒண்டுமே செய்யத் தெரியாத அந்த முட்டாள் நட்சத்திரங்கள விட எனக்குப் பிடிச்சிருக்கு.
அந்த நிலவுதான் என்ர றோல் மொடல்.
(சும்மாயிருந்து சுகமனுபவிப்பதின் மகிமை தெரிந்தவர்களுக்கு இது புரியும்.)

அதாலதான் சொல்லுறன், நான் நட்சத்திரமா இருக்க விரும்பேல.
நிலவாய் இருக்க விரும்பிறன்.
அதானால என்னை இனி ‘இந்தவார நிலவு’ எண்டே கூப்பிடுங்கோ.
நிலவாயிருந்து கொண்டு உங்களுக்கு வெள்ளி காட்டுறன்.

நான் நிலவு எண்டு சொன்னதால முதலே உங்களிட்டயிருந்து தப்பிக் கொள்ளுறன். நிலவைப் போலவே என்னட்ட ஒண்டுமில்ல (சுத்த வேஸ்ட்). அதால உங்களுக்குப் பயன்படுற மாதிரி இந்தக் கிழம எதுவும் இருக்காது.
கிழமைக் கடைசியில மட்டும் உங்களுக்குப் பயன்படுற மாதிரி ஒரு பதிவு போடுவன். அதுவும் இதுதான்அந்தப் பதிவு எண்டு சொல்லித்தான் போடுவன். நான் தெரிவு செய்யப்பட்ட காலம் அந்தமாதிரி. ஆரவாரங்களுக்குள்ள சத்தமில்லாம இந்தக் கிழமைய ஓட்டி முடிச்சிடலாம்.

கொல்லப்பட்ட மாமனிதன் சிவராமுக்கு என் அஞ்சலியைத் தெரிவித்து, இந்தக் கிழமையைத் தொடங்குகிறேன்.



சரி, அப்ப வரட்டே?
வெள்ளி பாக்க வாற எல்லாருக்கும் என்ர வாழ்த்துக்கள்.

பட உதவி சயந்தன்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"நட்சத்திரமாகவன்றி, நிலவாக…" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (02 May, 2005 11:13) : 

எழுதிக்கொள்வது: துளசி கோபால்

வாங்க வசந்தநிலவே!

வணக்கம். நல் வரவு!!!

13.38 2.5.2005

 

said ... (02 May, 2005 12:03) : 

எழுதிக்கொள்வது: shreeyaa

நீங்களோ இந்தக்கிழமை? வாங்கோ வாங்கோ..

12.31 2.5.2005

 

said ... (02 May, 2005 12:10) : 

நிலவு!

முதல் பதிவே கலக்கல்!!!

தொடருங்க தொடருங்க.

-மதி

பி.கு:
குரல் பதிவு எப்ப வரும் எண்டு எங்கட வீட்டு சனம் கேக்குது.

 

said ... (02 May, 2005 13:04) : 

வசந்தன் உமக்கு மச்சம்தான்.
முதலில வாழ்த்துச் சொன்னவையெல்லாம் பொடிச்சியள் பாருங்கோ.

 

said ... (02 May, 2005 13:54) : 

ஆகா... நீங்க தான் இந்தவாரா நட்சத்திரமா... ஸாரி,.. ஸாரி.... நிலவா.

"நிலவே கொஞ்சம் முகம் காட்டு" - எஜமான் பட ரஜினி பாடல் தான் ஞாபகம் வருகிறது. கொஞ்சம் மூஞ்சை காட்டப்பா... போட்டோல ஒரே ஒளியா தான் இருக்கு. அது உங்கள் தலைக்கு பின்னால் தோன்று ஒளிவட்டமோ....

இந்த வாரம் கலக்குங்க. ஆர்வமுடன் படிக்கிறேன் உங்கள் பதிவுகளை....

 

said ... (02 May, 2005 14:04) : 

எழுதிக்கொள்வது: ஆர்வலன்

சயந்தனின் பதிவில் இது அவரது படம் என்று வந்ததே.. நீங்க ரண்டு பேரும் ஒண்ணா.. அப்பிடியில்லைனா எதுக்கு அவர் போட்டோ?

14.32 2.5.2005

 

said ... (02 May, 2005 14:21) : 

வாங்கோ வங்கோ அப்ப வருவன் இப்ப வருவன் என்று படங்காட்டாமல் நேரா வந்திட்டீங்கள்.சரி சரி உங்களோடை வெள்ளி பார்க்க நாங்களும் தயார்

 

said ... (02 May, 2005 14:55) : 

வாருமய்யா, நட்சத்திரம்! இல்லையில்லை நிலவு. (பூமிக்கு இருக்கின்ற ஒரு உபகோள்தான் நிலவு, அப்படி மிச்சக்கிரகங்களுக்கும் 'நிலவுகள்' இருக்கின்றதென்று சமூகக்கல்வியில் படித்ததாய் ஞாபகம் மற்றும் நிலவு என்பது பெண்களுக்குத்தான் உவமிக்கப்படுவதும் கூட :-) ).
//சயந்தனின் பதிவில் இது அவரது படம் என்று வந்ததே.. நீங்க ரண்டு பேரும் ஒண்ணா.. //
வசந்தனும், சயந்தனும் ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவிகளோ :-) ?

 

said ... (02 May, 2005 16:06) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

நட்சத்திர நிலவு


கலக்கல் தான் வசந்தன் தொடரட்டும்............வாழ்த்துக்கள்

8.30 2.5.2005

 

said ... (02 May, 2005 18:33) : 

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
முதலில அது என்ர படமெண்டு எங்க சொன்னனான்?
அது சாட்சாத் சயந்தனேதான். அத கீழ சொல்லியிருக்கிறன்.

அல்வாசிட்டி! அது என்ர முகமில்லை. இந்த நிலவு அவ்வளவு இலகுவா முகம் காட்ட மாட்டுது.

டி.சே! அதாலதான் நானும் மனுசருக்கிருக்கிற ஒரே நிலவு எண்டு எழுதினனான். பெண்களுக்கு உவமிக்கிறத ஆண்களுக்கு மாத்திறதில எனக்கு அலாதிப்பிரியம்.

அநாமதேயம்!
என்ன சொல்ல வாறியள்? முதல் 3 பேரும் பொடிச்சியளா அமைஞ்சது தற்செயலானது. (முதலில பொடிச்சியள் எண்டு சொல்லிறதில அவைக்கு உடன்பாடோ தெரியேல)
குளக்காட்டான்! அதென்ன 'நட்சத்திர நிலவு'?

 

said ... (02 May, 2005 18:37) : 

அதுசரி!
கங்காரு படம் எப்பிடி?

 

said ... (02 May, 2005 20:00) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

//குளக்காட்டான்! அதென்ன 'நட்சத்திர நிலவு'?//

அதா வசந்தன் அவங்க உங்களை தெரிவு வெய்தது இவ்வாரு நட்சத்திராக. நீரோ என்னை நிலவெண்டு கூப்பிட செபல்லி அடம்பிடிக்கிறீர் அதால நான் இரணை;டையும் சேர்த்திருக்கு சபியா

12.22 2.5.2005

 

said ... (02 May, 2005 20:05) : 

கனக்க எழுத்து பிழை மேலே

அதா வசந்தன் அவங்க உம்மை தெரிவு செய்தது இவ்வார நட்சத்திரமாக. நீரோ உம்மை நிலவு எண்டு கூப்பிட சொல்லி சொல்லுறீர் அதான் இரண்டையும் சேர்த்திருக்கு சரியா

 

said ... (02 May, 2005 20:17) : 

போடு காலி எண்ட ஒண்டு தெரியுமோ வசந்தனுக்கு.. வேலிக்கு கதியால் நடும் போது ரண்டு கதியாலுக்குள்ளை இடைவெளி வந்திட்டால்.. ஒரு நோஞ்சான் தடியை செருகி விடுறவை.. அதை மாதிரி உம்மடை பதிவில இடம் கிடக்கெண்டதுக்காக.. என்ர படங்களையோ போடுறது... இனி மேல் கனவிலயும் உமக்கு படம் அனுப்ப மாட்டன்..
வசந்தனின் இந்த செயல் குறித்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைவதுடன்.. எனது கடும் கண்டனத்தையும் தெரிவித்து கொள்கிறேன்..

 

said ... (02 May, 2005 20:46) : 

வா, வா, வசந்தமே, சுகம் தரும் சுகந்தமே, தெருவெங்கும் திருவிழா, தீபங்களின் ஒளி விழா :-)

பாராட்டுக்களும், இவ்வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களும் !

என்றென்றும் அன்புடன்
பாலா

 

said ... (02 May, 2005 22:40) : 

அட இப்பதானே பாத்தன். வாங்கோ எங்கட சு10ப்பர் ஸ்டார். சும்மா நீங்கள் எங்கள பேக்காட்டுற மாதிரி ஏதாவது எழுத அதை வாசிக்கிறாக்கள் முகத்துக்காக (படத்தைப் பாத்திட்டு) ஆகா ஓகோ எண்டு புழக இந்தப் புலுடா விடுற வேலை எல்லாம் வேண்டாம். ஓழுங்கா நல்ல விஷயங்களை எழுதுங்கோ. முஸ்பாத்தியா எங்களச் சிரிக்க வைக்கிற மாதிரி எழுதுங்கோ. நல்ல ஜோக் கேட்டுக் கனகாலமாகுது. (நீங்கள் என்னதான் சொல்லுங்கோ சயந்தனும் வசந்தனும் ஒன்றே.)

 

said ... (02 May, 2005 23:03) : 

பார்க்கலாம் இந்த நையாண்டி எங்கை போய் முடியுதெண்டு.

உங்கள் வாரம் வெற்றிகரமான வாரமாய் அமைய வாழ்த்துக்கள் வசந்தன்.

எங்கே சபையோரின் கைதட்டல்(கள்)!

 

said ... (03 May, 2005 01:01) : 

முதலாவது படத்தை நீக்கிவிட்டேன். ஆனால் இப்போது பார்த்தால் தமிழ்மணத்தின் முன்பக்கத்தில் மீண்டும் வந்துவிட்டது. தவறுக்கு வருந்துகிறேன்.

 

said ... (03 May, 2005 01:46) : 

நிலா காயட்டும்; நில்லாமல் உவத்தால் இன்னும் உத்தமம்

 

said ... (03 May, 2005 08:44) : 

காய்ந்து கொண்டுதான் இருக்கிறன்.

 

said ... (03 May, 2005 09:34) : 

எழுதிக்கொள்வது: Mathy Kandasamy

என்ன நிலவே ஒரு பதிவை 3 தரம் போட்டு பிலிம் காட்டுறீர்?

20.45 2.5.2005

 

said ... (03 May, 2005 09:42) : 

நிறையப் ஃபிலிம் காட்டவும்.

 

said ... (03 May, 2005 22:39) : 

தமிழ்மணம் பக்கத்தில் இதற்கான இணைப்பை க்ளிக் செய்ய, இந்தப் பக்கம்தான் வருகின்றது. ஒருதரம் போய் பாருங்க வசந்தன்.

http://www.blogger.com/blogspot/notfound.pyra?url=/2005/05/blog-post_01.html&sub=vasanthanin.blogspot.com

 

post a comment

© 2006  Thur Broeders

________________