Wednesday, May 04, 2005

நினைத்தாலே புளிக்கும்.

பிறை - இரண்டு


வணக்கம்!
இதைப் பார்க்கையில் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறது? எனக்கு என் விடலைப் பருவம் ஞாபகம் வருகிறது. மாங்காய் விளாங்காய் போலவே இந்தப் புளியும் சுவாரசியமான மனப்பதிவுகளைக் கொண்டுள்ளது. நினைத்தாலே வாயூறும். களவாகப் புளி பறிப்பதும் எமக்கொரு விளையாட்டு. எங்கட ஊரில ஒருத்தரின்ர வளவுக்க இனிப்புப் புளி நிண்டது. வழமையான புளியள் போல இல்லாமல் நல்லா இனிக்கும். ஆனா சின்னனா இருக்கும். அந்தப் புளிக்குப் பாதுகாப்பும் அதிகம்தான். வளவச்சுத்தி முள்ளுக்கம்பி வேலி. அதோட பத்தையளும் வெட்டிவிட்டிருந்ததால ஆக்களாரேன் போனா இலகுவாத் தெரியும். அந்தப் புளி பிடுங்கப்போய் ஒருநாள் பிடிபட்டுப் போனம். எண்டாலும் பெரிய பிரச்சினையில்லாமல், பிரச்சின வீட்ட போகாமல் முடிச்சாச்சு.
இந்தப்படம் இனிப்புளியில்ல. சாதாரண புளி.

கொஞ்சம் எட்ட நின்று பார்க்கவும். வாயிலிருந்து ஏதாவது வழிந்து உங்கள் விசைப்பலகை நனையக்கூடாது.

---------------------------------------------------

வந்ததுதான் வந்தீர்கள். அப்பிடியே ஊடகவியலாளன் 'மாமனிதன்' சிவராமின் கொலைக்கு நீதியான விசாரணை தேவையென மனித உரிமைகள் ஆணையகத்துக்கு முறையிடும் மனுவில் உங்கள் பொன்னான வாக்குகளையும் போட்டுச் செல்லுங்கள்.

இங்கே சென்று வாக்குப்போடுங்கள்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"நினைத்தாலே புளிக்கும்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (03 May, 2005 23:07) : 

வீடுகளில புளிய மரம் ஆட்டுறதும்.. ஒரு பெரிய (அஞ்சாறு போரை கூப்பிட்டு) நகழ்வா.. நடக்கும்.. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சொல்லி..

பங்குப் புளி யென்றால்.. எங்கடை பக்கத்தை மட்டும் தான் ஆட்டுவம்.. சிலது தட்டுத்தவறி அங்காலையும் விழுந்தால்.. அதை எடுக்கிறதுக்கு அவைக்கு சொல்ல வேணும்..

அப்பிடி புளிய மரம் ஆட்டும் போது புளியம்பழங்கள் சடசட எண்டு விழும்.. சரியா கை தட்டுறது மாதிரி இருக்கும்..

 

said ... (04 May, 2005 08:04) : 

எழுதிக்கொள்வது: DJ

ஆகா,புளியம்பழம்...
////கொஞ்சம் எட்ட நின்று பார்க்கவும். வாயிலிருந்து ஏதாவது வழிந்து உங்கள் விசைப்பலகை நனையக்கூடாது.//

இதை வாசிக்கமுன்னரே புளியம்பழப்படத்தைப் பார்த்ததால், விசைப்பலகைக்கு குளிப்பாட்டவேண்டும் :-).

18.32 3.5.2005

 

said ... (05 May, 2005 01:10) : 

பின்னூட்டங்களுக்கு நன்றி.
உந்தப் புளி உலுப்பிற விளையாட்டு பெரியவிசயம். அக்கம்பக்கமெல்லாம் சொல்லித்தான் நடக்கும். அதே மாதிரி புளி அறுக்கிறதும், கனபேர் கூடி அருவாளில புளி அரியிறது.
டி.சே.!
கனபேருக்கு விசைப் பலகை பிசகிப்போட்டுதுபோல. பின்னூட்டங்களக் காணேல....

 

post a comment

© 2006  Thur Broeders

________________