Thursday, May 05, 2005

கண்ணியகற்றல்.

பிறை - மூன்று.
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.


மூன்று கு(ம)ந்திகள்
இந்தப் படத்தப் பாக்கேக்க உங்களுக்கு ஏதாவது ஞாபகம் வருதோ?
எனக்குக் கண்ணிவெடியகற்றும் பணி ஞாபகம் வருது.
இதில மூண்டுபேர் குந்தியிருக்கிற மாதிரித்தான் அவயளும் பயிற்சி செய்வினம். இவயள் என்ன கிளியர் பண்ணுறதுக்குக் குந்தியிருக்கினமோ தெரியாது. அதுக்குள்ள படத்துக்கு போஸ்குடுக்கினம். கையில் உழவாரம் இல்லாத குறைதான்.


இதில நான் இல்ல. ஆனா உங்களுக்குத் தெரிஞ்ச வலைப்பதிவாளரொருவர் இதில இருக்கிறார். கண்டு பிடியுங்கோ பாப்பம்.

குறிப்பு: இவர்களின் அனுமதியின்றியே இப்படம் போடப்படுகிறது.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"கண்ணியகற்றல்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (05 May, 2005 08:51) : 

எப்படியப்பா, எனக்குத் தெரியாமல் எனது படத்தை எடுத்தனீர் :-)? ச்சீய்ய்... வரவர privacy இல்லாமற்போய்விட்டது.

 

said ... (05 May, 2005 09:28) : 

முதலே ஒரு விசயத்தச் சொல்லிவிடுறன்.
'மந்திகள்' எண்டும் பொருள் வரக்கூடியமாதிரி தலைப்புப் போட்டதால இது செர்ரிப்பூவோ எண்டு ஒருத்தரும் கணிக்கக்கூடாது. இதில அவரில்ல.

 

said ... (05 May, 2005 10:07) : 

கருத்துப் பெட்டிக்கருகே நீங்கள் நன்றி சொல்லும் செல்வா யாரென்று ஒரு குறிப்பும் இல்லையே. தனிப்பட்ட செய்தியோ?

 

said ... (05 May, 2005 10:13) : 

ஒருவர் தான் வலைப்பதிவாளர் என்றால் அவர் மணமானவராய் இருக்கக் கூடும் என்பது என்னூகம்.

 

said ... (05 May, 2005 10:13) : 

அது நிச்சயமா நீங்களில்ல.

 

said ... (05 May, 2005 10:15) : 

//ஒருவர் தான் வலைப்பதிவாளர் என்றால் அவர் மணமானவராய் இருக்கக் கூடும் என்பது என்னூகம்.
//
இது பற்றி என் விவரக்கோவையிற் சொல்லியுள்ளேன்.
இருந்தாலும் உங்களுக்காக மீண்டும்.
இன்னும் கால்கட்டு போடப்படவில்லை.

 

said ... (05 May, 2005 11:32) : 

எழுதிக்கொள்வது: துளசி கோபால்

கால்கட்டு... என்ன அருமையான பொருள் நிறைந்த வார்த்தை! இப்பத்தான் கவனிச்சேன்.

14.0 5.5.2005

 

said ... (05 May, 2005 12:51) : 

எழுதிக்கொள்வது: you know me

க்ளு ஒன்று தர முடியுமா வசந்தன்

13.10 5.5.2005

 

said ... (05 May, 2005 13:17) : 

//இவயள் என்ன கிளியர் பண்ணுறதுக்குக் குந்தியிருக்கினமோ தெரியாது.//
:-)

Karthikramas

 

said ... (05 May, 2005 14:10) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (05 May, 2005 14:10) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (05 May, 2005 14:10) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (05 May, 2005 14:10) : 

அட! நான் இல்லைன்னு தெரியுமுங்கோ. வேறு யார்னு குறிப்புத் தருவீங்களா இல்லை தனிச்செய்தியோன்னு கேட்டேன். (இது படத்தப் பத்தி இல்லை. செல்வா பத்தி)

 

said ... (05 May, 2005 14:38) : 

சயந்தன்

 

said ... (05 May, 2005 14:53) : 

//இவயள் என்ன கிளியர் பண்ணுறதுக்குக் குந்தியிருக்கினமோ தெரியாது.//

முதலாமவர் எதையும் "கிளியர் பண்ணுறது மாதிரி தெரியவில்லை, மற்றிருவர் பற்றி நிச்சியமாக சொல்ல முடியாது.

 

said ... (05 May, 2005 14:59) : 

எழுதிக்கொள்வது: Mathy Kandasamy

:அதிர்ச்சி!: :இரட்டை அதிர்ச்சி!!:

என்ர படம் உங்களிட்ட எப்படிக் கிடைச்சது?????

2.11 5.5.2005

 

said ... (05 May, 2005 15:10) : 

எழுதிக்கொள்வது: Seelan

உங்கள் கேள்விக்கு இவரினதும் இவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பதில் சொல்ல முடியாது என்று கட்டுப்பாடுகள் இல்லயா..?

15.36 5.5.2005

 

said ... (05 May, 2005 17:13) : 

சீலன் !
நிச்சயமாக இல்லை. நீங்கள் அந்தக் குடும்பத்தவராக இருக்கும் பட்சத்தில் தெளிவாகவே சொல்லலாம்.

மதி!
உங்கள ஒரு பொடிச்சியெண்டெல்லோ நினைச்சுக்கொண்டு இருந்தனான்.

செல்வராசு!
ஏனப்பா இத அறியிறதில இவ்வளவு மும்முரமா நிக்கிறியள்? அது ஒரு பேர். அவ்வளவுதானே. விட்டுவிடுமன்.

டி.சே.! உமக்கு என்ன பதில் சொல்லிறதெண்டு தெரியேல. நான் குரங்கு அல்லது வேற ஏதாவது படத்தப் போட்டு நீர்தான் எண்டு சொல்லுறதுக்கு முதல் முந்திவிடவேணும் எண்ட உம்மட அவசரத்தைத்தான் நான் இதில பாக்கிறன்.

க்ளு கேட்ட ஆக்களுக்கு!
இவர் என்ர ஆலோசகர். நான் வெள்ளி காட்டுறதுக்குப் பொருத்தமாயிருக்குமெண்டு என்ர அறிமுகப்பதிவில போட்ட படங்களுக்குச் சொந்தக்காரர். ஏற்கெனவே இவரிண்ட படங்கள் சிலதுகள் வெளிவந்திருக்கு.
கண்டுபிடியுங்கோ பாப்பம்.

கண்டுபிடிச்ச ஆக்களுக்கு என்ர பாராட்டுக்கள்.
பின்னூட்டமிட்ட மற்றாக்களுக்கும் என்ர நன்றிகள்.

 

said ... (05 May, 2005 20:10) : 

//இவர் என்ர ஆலோசகர்//

ம்.. நீங்க தலைவர்ன்னு சொல்ல வர்றீங்க போல தெரியுது..

 

said ... (05 May, 2005 22:45) : 

அவர் எனக்கு ஆலோசகரெண்டா நான் அவருக்குத் தலைவரா இருக்கோணுமா என்ன?
பரஸ்பரம் இருவருமே மற்றவர்க்கு ஆலோசகர்களாகத்தான் இருக்கிறோம்.

 

said ... (05 May, 2005 23:35) : 

வசந்தன் முதலாவதாக இருப்பது நடிகர் விஜெய், ரெண்டாவது சயந்தன், மூன்றாவதா இருப்பது வடிவேலு. சயந்தன் இந்தியா போயிருக்கேக்க விஜெயின் படம் ஒன்றில் ஷீட்டிங் பார்க்கப் போயிருந்தார் (காட்சி பெரிய பணக்காறனான விஜெயும் அவர் நண்பர் வடிவேலுவும் ஒரு சேரிப்பகுதியைக் கூட்டித் துப்பரவாக்குவது) அப்போது விஜெய் உடன் சேர்ந்து சேரியைத் துப்பரவாக்க இன்னும் சில இளைஞர்கள் தேவைப்பட்டதால் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற சயந்தனை (ஒஸ்ரேலியாவில் இருந்து போனதால் நல்ல கெட்அப்பில் நிற்ற) இயக்குனர் இழுத்து விட்டுவிட்டார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு ஸ்டில் தான் இது. இந்தத் திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் இந்த ஸ்டில் குமுதத்தில் விளக்கத்துடன் வந்திருந்தது நான் என்னுடைய ரெண்டு கண்ணாலும் பார்த்தேன்.

 

said ... (05 May, 2005 23:40) : 

கறுப்பி!
நீங்கள் முதலாவதாயிருக்கிறது விஜய் எண்டு சொல்லிப்போட்டியள். இனி கொஞ்ச நாளுக்கு ஒராளுக்கு நித்திரையே வராது.
பிரகாசுக்கு நன்றி.

 

said ... (05 May, 2005 23:54) : 

வசந்தன், அடுத்த முறை, புகைப்படத்தை அப்லோட் செய்யுமுன், jpeg கோப்பின் ஒரிஜினல் பெயரை மாற்றி அப்லோட் செய்யவும் :-)

 

said ... (06 May, 2005 00:27) : 

//வசந்தன் முதலாவதாக இருப்பது நடிகர் விஜெய்//

அட!

 

said ... (06 May, 2005 14:17) : 

சயந்தன்!
கனக்கத் துள்ளாதையும்.
அதுவும் கறுப்பி சொன்னதக்கேட்டு. வேறயாரும் சொல்லியிருந்தாலும் பரவாயில்ல.
அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு, (வேறயென்ன புளுகுகள் சொல்லுறனாங்கள்?) கறுப்பி சொன்னா உடன துள்ளாதையும்.

 

said ... (06 May, 2005 14:32) : 

//அதுவும் கறுப்பி சொன்னதக்கேட்டு. வேறயாரும் சொல்லியிருந்தாலும் பரவாயில்ல.
அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு, (வேறயென்ன புளுகுகள் சொல்லுறனாங்கள்?) கறுப்பி சொன்னா உடன துள்ளாதையும்.//
:-)))))

 

post a comment

© 2006  Thur Broeders

________________