Friday, May 06, 2005

சோடி

பிறை நான்கு.
கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.


பஞ்சவர்ணப் பருந்துகள்.


இவை உங்களுக்குச் சாதாரண படங்களாகத் தெரியலாம்.
ஆனால் இவற்றின் பின்னான என் உழைப்புப் பெரியது. மெல்பேணில் ஒரு பூங்காவில் (ஓமோம் இங்க தடுக்கி விழுகிற இடமெல்லாம் பூங்கா தானே) முதன்முதல் இவற்றைப் பார்த்து ஆச்சரியப்பட்டு படம்பிடிக்கக் கருவியை எடுத்தவுடன், பிகு பண்ணிக்கொண்டு அவை ஒளிய, அக்கருவியுடன் திரிந்து ஏறத்தாள இருபது நிமிட முயற்சிப்பின் பின் சிக்கின. அதுவும் முழுமையாகத் திருப்தியாக இல்லை.

(என்னைப் போலவே படத்துக்கு முகங்காட்டுவதில் இவற்றுக்கும் அலர்ஜியோ தெரியவில்லை.)

குறிப்பு: இவை பருந்துகளல்ல என்று வழமைபோற் சண்டைக்கு வராதீர்கள். ஏற்கெனவே கங்காருவோடு நொந்துபோய் இருக்கிறேன். பிறகு அழுதிடுவேன் .

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"சோடி" இற்குரிய பின்னூட்டங்கள்

 

Anonymous Anonymous said ... (06 May, 2005 14:32) : 

எழுதிக்கொள்வது: துளசி கோபால்

ஏம்ப்பா, பஞ்சவர்ணக்கிளிகள்'னு போட்டா அழாம இருக்கலாம்ல

17.0 6.5.2005

 

Blogger Unknown said ... (06 May, 2005 14:37) : 

பஞ்ச வண்ணப் பருந்தா?....யனைக்கு சருக்கிருச்சே அடி.!

 

Anonymous Anonymous said ... (06 May, 2005 14:38) : 

எழுதிக்கொள்வது: DJ

// இவை பருந்துகளல்ல என்று வழமைபோற் சண்டைக்கு வராதீர்கள். ஏற்கெனவே கங்காருவோடு நொந்துபோய் இருக்கிறேன். பிறகு அழுதிடுவேன் //
:-).
...
'ப்ஞ்சவர்ணக்கிளி'யைப் பார்க்கும்போது கனக்க ஞாபகங்கள் வருகின்றது. அதேயேன் சொல்வான், பிறகு உம்மளைப்போன்ற ஆக்களிடம் 'அடங்கும்' என்ற திட்டையேன் வாங்குவான் :-)?

1.4 6.5.2005

 

Anonymous Anonymous said ... (06 May, 2005 14:41) : 

எழுதிக்கொள்வது: Mathy Kandasamy

அட அட பஞ்சவர்ண 'பருந்துகள்'தான் எவ்வளவு வடிவாய் இருக்கின்றன.

-மதி

1.53 6.5.2005

 

Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said ... (06 May, 2005 14:43) : 

//'ப்ஞ்சவர்ணக்கிளி'யைப் பார்க்கும்போது கனக்க ஞாபகங்கள் வருகின்றது. அதேயேன் சொல்வான், பிறகு உம்மளைப்போன்ற ஆக்களிடம் 'அடங்கும்' என்ற திட்டையேன் வாங்குவான் :-)? //

DJ, ummatta solla visayam illai endu sollum. oththukkoLLuRan. athai vittuttu vasanthan'ai ethukku vambikku izukkiReer?

[Vasanth, neer kuduththa kaasukku Eththa maathiri ezuthittanaa? ;)]

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (06 May, 2005 14:56) : 

இல்ல இன்னும் காணாது. ஆனா நீங்களொண்டப் புரிஞ்சு கொள்ள வேணும். டி.சேக்கும் இப்பிடி அழுத்தங்கள் இருக்கிறதாலதான் இப்பிடி ஏதாவது எழுத வேண்டியிருக்கு.

 

post a comment

© 2006  Thur Broeders

________________