Thursday, May 05, 2005
உறவு முறைகள் -1
பிறை - நான்கு. நாலாம்பிறை பார்த்தா நாயலைச்சல்.
உறவு முறைகள் -1
வணக்கம்! இராம.கி. தமிழில் உறவுமுறைகள் பற்றி எழுதினார். நானும் இதுபற்றி ஓர் ஆராய்ச்சி செய்து எனது முடிவுகளைச் சுருக்கமாக இங்க பதியிறன்.
இது எங்கட ஊரில உறவுகளைக் கூப்பிட நாங்கள் பாவிக்கிற சில சிறப்புச்சொற்கள். கொஞ்சம் கொச்சையா இருக்கலாம். ஆனா ஓர் ஆள் இல்லாத சந்தர்ப்பத்தில குறிப்பிட்ட அந்த நபரை, கேட்கப்படும் நபருக்கும் தேடப்படும் நபருக்குமிடையிலான உறவுமுறையைக் கொண்டு கதைக்கப்படும்.
• கொண்ண எங்க போயிட்டான்? • கொக்கா இருக்கிறாளோ? • கோத்த சமைச்சிட்டாவோ? • கொம்மாவிட்ட இதக் குடு. • கொப்பர் சந்தையால வந்திட்டாரே? • கொய்யா தவறணையால வந்திட்டாரே?
மேற்கூறியவைகள் யாழ்ப்பாணத்தில் சாதாரணமாகப் பயன்பாட்டிலிருக்கும் மொழிநடை. மிக முக்கியமான விசயம், அக் குறிப்பட்ட நபர் அங்கு நிற்கக்கூடாது. இனி அந்தச் சொற்கள் எவற்றைக் குறிக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
• கொண்ண - அண்ணை. கொண்ணன் - அண்ணன். • கொக்கா – அக்கா. • கோத்தை – ஆத்தை. (ஆத்தை என்ற சொல் பெருமளவு பயன்பாட்டிலில்லை. ஆனால் கோத்தை உண்டு) • கொம்மா – அம்மா. • கொப்பர் - அப்பர். • கொப்பா – அப்பா. • கொய்யா – ஐயா.
இவையெல்லாவற்றிலும் கவனித்தால் ஒரு விசயம் தெரியும். ‘கொ’ அல்லது ‘கோ’ ஏற்றுத் திரியும் இந்தச் சொற்களனைத்தும் வயது மூத்தவர்களைக் குறிக்கும் உறவு முறைகள். இளையவர்களைக் குறிக்கும் தம்பியை ‘கொம்பி’ என்றோ தங்கையை “__ங்கை” என்றோ தங்கச்சியை ‘கொங்கச்சி’ என்றோ அழைப்பதில்லை. ஏனெண்டா நாங்கள் மூத்தாக்கள நல்லா மரியாதை செய்யிறனாங்கள் எண்டது இதிலயிருந்து நல்லா விளங்கும். தம்பி தங்கச்சியெல்லாம் சின்ன ஆக்கள் எண்ட படியா அவைக்கு “இவ்வளவு” மரியாதை தேவயில்ல.
ஆனா ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்லுது: அப்பிடி ‘கொ’ கரமாத் திரியிற சொல்லுகளெல்லாம் ‘அ’கரம், ‘ஆ’காரத்தில தொடங்கிறதுகளாம். (ஐயன்னா அ,இ என்பவற்றின் இணைவொலிதான்)
இந்த சுருக்கமான ஆராய்ச்சிக் கட்டுரையில் திருப்தி இல்லாதவர்கள் நானெழுதி வெளியிட்ட “செந்தமிழ் உறவுமுறைச் சொற்களஞ்சியப் பேரகராதி” என்ற நூலை வாங்கிப் படித்து மேலதிகமாகவும் விடங்களை அறிந்து கொள்ளலாம். Labels: ஈழத்தமிழ், நட்சத்திரக் கிழமை, பேச்சுத்தமிழ், விவாதம் |
"உறவு முறைகள் -1" இற்குரிய பின்னூட்டங்கள்
உண்மையில அப்பிடியொரு புத்தகம் எழுதினீங்களோ?
தங்கை, தங்கச்சி, தங்கி
ப(கொ)ச்சை ப(கொ)ச்சையா தமிழ் ஆராய்ச்சி நல்லா இருக்கு.
நல்லாத்தான் ஆராய்ச்சி செய்யிறியள். உந்தச் சொல்லுகளக் கேட்டுக் கனகாலமாச்சு. இன்னும் உங்கட ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்.
-மகிழன்.-
எழுதிக்கொள்வது: mayavarathaan
கொக்காமக்கா.. இம்புட்டு விஷயமிருக்கா?!
15.8 22.1.2002
எழுதிக்கொள்வது: kulakaddan
அதை எங்கடை ஆக்கள் நக்கலாய் சொல்லுறவை
உங்கடை அப்பா எண்டா கொப்பா
எ;எடை அப்பா அப்பா
17.21 5.5.2005
எழுதிக்கொள்வது: komaali
அதென்ன '--ங்கை' எண்டு முடிச்சிருக்கு. முன்னுக்கு வரவேண்டிய எழுத்து என்ன?
1.48 6.5.2005
//உண்மையில அப்பிடியொரு புத்தகம் எழுதினீங்களோ? //
பின்ன எழுதாமலே சொல்லுறன்.
கறுப்பி!
நீங்களும் 'கொச்சையா' ஆராய்ச்சி தொடங்கீட்டியள் போல.
குளக்காட்டான்.!
எட இத நக்கலாயோ சொல்லுறவை?
அநாமதேயம்!
கோமாளி எண்டு பெயர்தந்து உந்தக் கேள்வியக் கேக்கிறபடியா உமக்கு முன்னுக்கு வாற எழுத்து என்னெண்டு தெரியும்.
மாயவரத்தான், மகிழன் உட்பட பின்னூட்டமிட்ட எல்லாருக்கும் நன்றி.
அப்பிடியே,
ஆச்சி - கோச்சி.
அப்பு - கொப்பு.
அம்மம்மா - கொம்மம்மா.
எண்டும் வருமோ?
எதுக்கும் உம்மட புத்தகம் எங்க வாங்கலாம், என்ன விலையெண்டும் சொல்லி வையும். அதில நிறைய விசயங்கள் இருக்கெண்டு நம்புறன்.
நீர் ஒராள்தான் புத்தகம் கேட்டு எழுதியிருக்கிறீர்.
உம்மட மின்னஞ்சல் தாரும் புத்தகம் பற்றி எழுதிறன்.
வசந்தன் !
இப்போதுதான் இதைப் படித்தேன். நல்லாய்வு; தம்பி;தங்கை...போன்றவை மாறவில்லை.
ஒலிப்பு;உச்சரிப்பை ஒட்டிய திரிபுகளானதால்; இவை மாற்றமுறவில்லையா??
வசந்தன் !
இப்போதுதான் இதைப் படித்தேன். நல்லாய்வு; தம்பி;தங்கை...போன்றவை மாறவில்லை.
ஒலிப்பு;உச்சரிப்பை ஒட்டிய திரிபுகளானதால்; இவை மாற்றமுறவில்லையா??
This comment has been removed by the author.
யோகண்ணை,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. 'அ' கரக் குடும்பத்தில தொடங்கிற சொற்களுக்குத்தான் இந்த 'கொ'கர மாற்றம் எண்டு மேல பதிவில சொல்லியிருக்கிறன். தம்பி, தங்கச்சி எல்லாம் அந்த வகைக்குள்ள வரா.
________________________________
நீங்கள் எழுதிற பின்னூட்டம் சிலவேளை சிக்கலைத் தருது. சொற்கள் இடைவெளியில்லாமல் எழுதிறதுதான் பிரச்சினை. வேற ஆக்களும் உப்பிடி எழுதிறதால பிரச்சினை வந்திருக்கு எண்டு நினைக்கிறன்.
பக்கத்தில போட்டிருக்கிற 'அண்மையில் கிடைத்த பின்னூட்டங்கள்' திரட்டிற பெட்டி இதால அகலமாகிப் போடுது.