Friday, May 06, 2005

தனித்தமிழும் மயிர்த்தமிழும்.

இப்போது தனித்தமிழ் பற்றிய பேச்செழுந்துள்ளது. இது ஒரு தேவையற்ற விவாதம். அதெப்படி தனித்தமிழிற் பேசுவது? தனித்தமிழ் பற்றிக் கதைப்பவர்களும் அதற்காக முயற்சிப்பவர்களும் வடிகட்டின பழமைவாதிகள். முற்போக்காகச் சிந்திக்கத் தெரியாதவர்கள். தாமும் முன்னேற மாட்டார்கள். தன் இனத்தையும் முன்னேற விடமாட்டார்கள்.

புதுச்சொற்கள் உருவாக்குகிறார்களாம். மண்ணாங்கட்டி. எவனுக்குத் தேவ தமிழ்க் கலைச்சொல். ஏனையா உங்களுக்கு இந்தத் தேவையில்லாத வேலை? டி.வி. என்று தமிழகத்தமிழிலோ, ரீ.வி. என்று ஈழத்தமிழிலோ எழுதவும் சொல்லவும் இலகுவான சொல்லிருக்கும்போது தொலைக்காட்சியென்று ஒரு சொல் தேவையா? ‘புளொக்’ என்று மூன்று எழுத்தில் அழகான சொல்லிருக்க என்ன திமிருக்கு ‘வலைப்பதிவு’ என்று நீட்டி முழக்க வேணும்? அப்பிடி எழுத என்ன வேலையில்லாதவர்களா நாங்கள்? ‘ட்ரெயின்’ என்ற சொல்லுக்கு தொடரூந்தாம். சிரிப்புத்தான் வருகிறது இந்த வேலையற்ற வீணர்களை நினைக்க. இங்கிலீஷில் (இங்லீஷ் என்ற அருமையான சொல்லிருக்க ஆங்கிலம் என்று அதை மாற்றி வைத்திருக்கிறார்கள். பரதேசிகள்.) இருக்கும் ரெலிபோன், ரீவி, கொம்பியூட்டர், பஸ், என்று நாங்கள் நாளாந்தம் ‘யூஸ்’ பண்ணும் நிறைய ‘திங்ஸ்’ எல்லாம் தமிழாகவே மாறிவிட்டது. இதைக் கமலஹாசன் கூடச் சொல்லிவிட்டார். ஆக அவற்றை அப்படியே ‘யூஸ்’ பண்ணிறது ‘பெட்டர்’.

முதலில் ‘தமிழ்’ என்ற சொல்லே எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. Tamil என்று இங்கிலிஷில் எழுதுவதை ‘ரமில்’ அல்லது ‘டமில்’ என்றுதானே எழுதவேணும்? இதென்ன ‘தமிழ்’? எங்கிருந்து இந்தச்சொல்லைப் பெற்றார்கள். இவர்கள் இங்கிலீஷையும் கொல்கிறார்கள். 'ரமில்' என்று எழுதுவதுதான் சரி. ஆனா ‘மெனி பீப்பிள்’ தமிழ் என்று ‘யூஸ்’ பண்ணுறதால நானும் அப்பிடியே ‘யூஸ்’ பண்ணுறன். ‘ரைகேஸுக்கு’ தேவையில்லாத வேலை. 'பீப்பிள் யூஸ்’ பண்ணிக்கொண்டிருக்கிற வேற ‘பாஷை’ சொல்லுகள தமிழில கொண்டு வாறது சுத்த அயோக்கியத்தனம். அது ஒரு இனத்த இன்னும் பின்னுக்குத்தள்ளும். அவயளுக்கு ஒழுங்காச் சண்டை பிடிக்கவே தெரியாது. அதுக்கயேன் தமிழில பெயர்பலகை வையெண்டு சொல்லுவான். தமிழைச் சாட்டி இன்னும் தமிழர்களை மூடர்களாக வைத்திருப்பதுதான் அவர்களின் குறிக்கோள். ‘முற்போக்குள்ள’ எந்தத் தோழனும் தோழியும் இதுகள ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ‘பஸ்’ என்ற அழகான சொல்லை ஏன் 'பேரூந்து' என்று மாற்ற வேண்டும். கொம்பியூட்டர் கண்டுபிடிச்சது வெள்ளக்காரன். அவனின்ர பேர விட்டுட்டு ‘கணிணி’ என்று ஒரு புதுப்பேர கொண்டருகினம். அதுமட்டுமில்லை. இடங்களின் பெயர்களையே மாற்றி வைத்துவிட்டார்கள் பாவிகள். ஜப்னா (Jaffna) என்ற அழகான சொல்லை யாழ்ப்பாணம் என்று வாயில் நுழையாதபடி நீட்டி வைத்திருக்கிறார்கள்.

இவர்களின் ஆட்டத்தைப் பார்க்கும்போது எரிச்சல்தான் வருகிறது. உலகத்தில் படிப்பதற்கு எவ்வளவு இருக்கு. இப்பவும் தமிழ் தமிழ் என்று மாய்ந்து கொண்டிருந்தா எண்டைக்கு முன்னேறுறது. இனியும் வேலையத்து ஆரேன் இப்பிடி எழுதாதையுங்கோ. உங்கட அருமையான நேரத்த இப்பிடிக் கிறுக்கித் தள்ளுறதில சிலவழிக்காதையுங்கோ. மனுசனுக்கு முகத்தில வளருரு மயிர வழிக்கவே நேரமில்லாமக் கிடக்கு. இதுகளப்பற்றிக் கதைக்கிற ஆக்களுக்கே மாட்டுவண்டில் ‘பாட்ஸுகள’ தமிழில சொல்லத் தெரியாது. இதுக்க எங்களுக்குப் போதிக்க வந்திட்டினம். வாற விசருக்கு “தனித்தமிழும் மயிர்த்தமிழும்”.

திட்டினது போதுமோ. போதாதெண்டாச் சொல்லுங்கோ. எனக்கு இருக்கவே இருக்கு ‘ஜெயக்காந்த பாஷை’.
'அர்ஜண்டா' எழுதினது. கனக்க பிழையள் இருக்கலாம்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"தனித்தமிழும் மயிர்த்தமிழும்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (06 May, 2005 19:41) : 

எள்ளு காயுது எண்ணைக்காக
எலிப் புளுக்கை காயுது என்னத்துக்காக?

 

said ... (06 May, 2005 20:03) : 

இப்பதான் ஒரு அழைப்பு வந்துது, நையாண்டிக்காக எழுதுறதுகள ஏன் இப்பிடி சீரியசா எடுக்கிறீர் எண்டு. உண்மைதான். நையாண்டி பண்ண எல்லாருக்கும் உரிமையிருக்கு. அட எனக்கும் இருக்குத்தானே. என்ன நான் சொல்லிறது?

ஞானபீடம்!
பின்னூட்டத்துக்கு நன்றி.

இதையும் ஒரு கூத்து பற்றின பதிவா எடுங்கோவன்.

 

said ... (06 May, 2005 20:30) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

வசந்தன் நல்ல பதிவு அதாவது நையாண்டி பண்ணுபவர்களுக்கு அவர்கள் நடையிலேயே பதிவிட்டிருக்கிறீர்கள். இம் மொழி மாற்றல் அல்லது தமிழாக்கம் பற்றி சில கருத்துக்கள் எழுத விருப்பம் உடனடியா முடியதுள்ளது. நேரம் வரும் போது எனது கருத்தை எழுதுகிறேன்

12.47 6.5.2005

 

said ... (06 May, 2005 22:17) : 

:-):-)

Natkeeran

 

said ... (06 May, 2005 22:19) : 

அருமை! அல்லது 'சூப்பர்ப்'னு வச்சுக்கோங்க! :-)

 

said ... (06 May, 2005 23:21) : 

எழுதிக்கொள்வது: NONO

நீங்கள் ஏன் தமிழ் எழுத்தில் எழுதித் துளைக்கிறீர்கள் பேசாம ஆங்கில sooooory இங்கிலீச்சில எழுதலாமே...26 எழுத்து பொதுமே

15.44 6.5.2005

 

said ... (06 May, 2005 23:25) : 

யோவ் வசந்தன் சண்டையெண்டு வந்திட்டுது பிறகு எதுக்கு முதுகுக்குப் பின்னால ஒளிஞ்சு கொண்டு சாடை மாடையா - அட நேர சொல்லுறதுதான கறுப்பி தன்ர பதிவில இப்பிடி எழுதியிருக்கிறா எண்டு உமக்கு "சப்போட்" (ஆதரவு) பண்ண இஞ்ச நிறம்பப் பேர் காத்துக் கொண்டு இருக்கீனம். எதுக்கு தூரத்தூர இருந்து வேலிச் சண்டை பிடிப்பான் தளத்துக்கே நேர வாரும் பாப்பம் நெஞ்சில (மயிர்) துணிவிருந்தா.
வசந்தன் துடித்தெழுந்திட்டார் தமிழ் பற்றி கதைச்ச உடன இந்தத் தம்பிக்குத் தமிழ் அவ்வளவு பற்றோ எண்டு அவர் புளொக் (வலைப்பதிவை) ஒருக்கா மேய்சன் அப்பிடி ஒண்டும் பற்றைக் காணேலை. நல்லா இங்கிலீசு (ஆங்கிலம்) கலந்து பூந்து விளையாடியிருக்கிறார். "தனித் தமிழும் மயிர்தமிழும்" நல்லா இருக்கு

 

said ... (06 May, 2005 23:39) : 

கறுப்பி!
ரெண்டாவது பின்னூடத்தைப் பாருங்கோவன்.

 

said ... (06 May, 2005 23:51) : 

நோ நோ நோ இனிப் பின் வாங்கக் கூடாது ஐசே. உம்மட அட்ரஸை முதல்ல சொல்லும் பாப்பம்.

 

said ... (06 May, 2005 23:56) : 

எந்த address?
மின்னஞ்சல் என்றால் உங்கடயத் தாங்கோ. நான் அதுக்கு மடல் போடுறன்.

 

said ... (06 May, 2005 23:57) : 

எழுதிக்கொள்வது: LL தாஸ்

//இங்லீஷ் என்ற அருமையான சொல்லிருக்க ஆங்கிலம் என்று அதை மாற்றி வைத்திருக்கிறார்கள். பரதேசிகள் ..ஜப்னா (Jஅffன) என்ற அழகான சொல்லை யாழ்ப்பாணம் என்று வாயில் நுழையாதபடி நீட்டி வைத்திருக்கிறார்கள்.//

பெயர்சொற்களை அதே மொழியில் உச்சரிப்பதுதான் முறை ...யாழ்ப்பாணத்தை , தஞ்சாவூரை உச்சரிக்கமுடியாமல் ஜாஃப்னா, தாஞ்சூர் என வெள்ளைக்காரன் சொன்னதை ஸ்டைல் என்க்கருதி சொல்லுபவரை கேலி செய்யும்போது , நாமும் இங்கிலீஷ் என்ற பெயர் சொல்லை , இங்கிலீஷ் என்று கூறுவது தான் முறை ..ஆங்கிலம்தான் இங்கிலீஷின் தமிழ் என்றால் 'ஜோர்ஜ் புஷ்' தமிழில் என்ன? வசந்தனுக்கு இங்கிலீஷில் என்ன?


22.13 4.12.2004

 

said ... (06 May, 2005 23:57) : 

//இங்லீஷ் என்ற அருமையான சொல்லிருக்க ஆங்கிலம் என்று அதை மாற்றி வைத்திருக்கிறார்கள். பரதேசிகள் ..ஜப்னா (Jஅffன) என்ற அழகான சொல்லை யாழ்ப்பாணம் என்று வாயில் நுழையாதபடி நீட்டி வைத்திருக்கிறார்கள்.//

பெயர்சொற்களை அதே மொழியில் உச்சரிப்பதுதான் முறை ...யாழ்ப்பாணத்தை , தஞ்சாவூரை உச்சரிக்கமுடியாமல் ஜாஃப்னா, தாஞ்சூர் என வெள்ளைக்காரன் சொன்னதை ஸ்டைல் என்க்கருதி சொல்லுபவரை கேலி செய்யும்போது , நாமும் இங்கிலீஷ் என்ற பெயர் சொல்லை , இங்கிலீஷ் என்று கூறுவது தான் முறை ..ஆங்கிலம்தான் இங்கிலீஷின் தமிழ் என்றால் 'ஜோர்ஜ் புஷ்' தமிழில் என்ன? வசந்தனுக்கு இங்கிலீஷில் என்ன?

 

said ... (07 May, 2005 00:00) : 

எழுதிக்கொள்வது: Elilan

"ஜப்னா (Jஅffன) என்ற அழகான சொல்லை "யாழ்ப்பாணம் என்று வாயில் நுழையாதபடி நீட்டி வைத்திருக்கிறார்கள்".
யாழ்ப்பாணம்தான் முதலில் வந்தது, ஜப்னா இப்பதான் வந்தது

10.34 6.5.2005

 

said ... (07 May, 2005 00:05) : 

எல்.எல் தாஸு அப்புறம் வெள்ளைக்காரன் தமிழை தமிழென்றே சொல்லியிருக்கலாமே ஏன் ரமில் என்கிறான்

 

said ... (07 May, 2005 00:05) : 

எல்.எல் தாஸு அப்புறம் வெள்ளைக்காரன் தமிழை தமிழென்றே சொல்லியிருக்கலாமே ஏன் ரமில் என்கிறான்

 

said ... (07 May, 2005 00:05) : 

எல்.எல் தாஸு அப்புறம் வெள்ளைக்காரன் தமிழை தமிழென்றே சொல்லியிருக்கலாமே ஏன் ரமில் என்கிறான்

 

said ... (07 May, 2005 00:05) : 

எல்.எல் தாஸு அப்புறம் வெள்ளைக்காரன் தமிழை தமிழென்றே சொல்லியிருக்கலாமே ஏன் ரமில் என்கிறான்

 

said ... (07 May, 2005 00:06) : 

நோ நோ நோ உங்கட ஹோம் அட்ரஸ். நீங்கள் இரவில படுத்து நித்திரை கொள்ளுற இடம். ம்.. எனக்கு ஒஸ்ரெலியாவிலை மட்டுமில்ல திம்பக் கூவிலையும் அடியாக்கள் இருக்கீனம் தெரியுமோ.

 

said ... (07 May, 2005 00:14) : 

அதைத்தான் நாம் குறை கூறுகிறோமே.. அப்புறம் நாமும் அதே தவறை செய்யலாமா? அது மட்டுமல்ல, இங்கிலீஷ் உச்சரிக்க முடியாமல் , இங்கிலீஸ் , இங்கிலீசு... என கூறினால் பர்வாயில்லை ... ஆங்கிலம் என்றால்??? பெயர்ச்சொல் என்றால் என்ன என்று தெரியாத அறியாமையைத்தானே காட்டுகிறது???

 

said ... (07 May, 2005 00:15) : 

வசந்தன்,

ரொம்பத்தான்! :)

இங்கிலீஷ் - ஆங்கிலம் சரிதான்.

மற்றும்படி firefox - நெருப்பு நரி இப்படி மொழி'பெயர்க்கிறது'தான் கூடாது.

நம்மட 'தமிழ்'ஐ பிரெஞ்சில் 'Tamoul' என்று எழுதி 'டமூல்' என்று சொல்வார்கள்.

அங்கிலமும் - 'anglais' என்று வழங்கப் படுகிறது. அது d'anglais, l'anglais என்று வி்ஷயத்துக்கு ஏற்றபடி மாறுகிறது.
http://machaut.uchicago.edu/?resource=frengdict&action=search&english=english&french=&root=&pos=%25


Francais- ஐத்தானே நாம் பிரெஞ்சு என்று சொல்கிறோம்!

பி.கு.:என்னுடைய பிரெஞ்சு டீச்சர் சொன்னது. Ceylan(நம்மூர்தான்) என்றால் அங்கே வசிப்பது Tamoul என்றுதான் தங்களுடைய(அல்ஜீரிய) பழைய புத்தகங்களில் இருக்கிறதாம். ஊருக்குப் போனால் பிரதி எடுத்து வருவதாகச் சொல்லியிருக்கிறார். நானும் எங்கேயாவது இது குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்த்தபடி இருக்கிறேன் - சரி, அது தனிக்கதை)

இந்த வாரம் சுவாரசியமாகப் போகிறது. நடத்தும்! நடத்தும்!!

-மதி

 

said ... (07 May, 2005 00:28) : 

கறுப்பி!
நீங்கள் பெரிய 'தாதா' எண்டு எனக்குத் தெரியுமுங்கோ. அதாலதான் உங்களோட நேரடியா முண்டேல. முந்தின பதிவொண்டில உங்கள 'அண்டப் புளுகி' எண்டு சொன்னதையும் இப்ப திருப்பி எடுத்துக்கொள்ளுறன்.
தயவு செய்து உங்கட அடியாட்கள அனுப்பிறத நிப்பாட்டுங்கோ. ஏனெண்டா நீங்கள் ஒஸ்ரேலியாவுக்கு அனுப்ப அவங்கள் அங்க தேடிக்களைச்சு அந்தக் கோபத்த உங்களில காட்ட ..... ஏன் பிரச்சின?

எல்.எல்.தாசு!
ஒரு மொழி தன்னிடமிருக்கும் வரிவடிவங்களை வைத்து எல்லா ஒலிகளையும் பெற்றுக்கொள்ள முடியாது. ஆங்கிலம் தன் 26 எழுத்துக்களையும் வைத்துத்தான் முழுச்சொற்களையும் உருவாக்குகிறது. தமிழிலிருக்கும் சில ஒலி வடிவங்களை ஆங்கிலத்தில் உருவாக்க முடியாது. (எடுத்துக்காட்டு: ள,ழ). ஏன் சைனாக்காரரின் மொழியில் ஏகப்பட்ட மூக்கொலிகள் உள்ளது. அவற்றை ஆங்கிலத்திலோ தமிழிலோ மூல உச்சரிப்பில் எழுத முடியாது. ஈழநாதன் சொல்வது போல் நாம் உச்சரிக்கும் முறையில் 'தமிழ்' என்பதை ஆங்கிலத்தில் எழுத முடியாது. Thamil என்று எழுதினாலும் அவர்கள் வேறுவிதமாகத்தான் உச்சரிப்பார்கள்.
மேலும் ஆங்கிலேயர்கள் Jaffna என்று சொல்வதைப்பற்றி நான் எதுவும் சொல்லவில்லையே.
மேலும் வசந்தனுக்கு ஆங்கிலத்தில் என்ன என்பதை ஆங்கிலேயர் யாரிடமாவதுதான் கேட்கவேண்டும். நான் Vasanthan என்றுதான் எழுதுகிறேன்.

 

said ... (07 May, 2005 00:34) : 

யோவ், என்ன சொல்ல வர்ரீர்?
நம்ம fஊல் ஆக்றீரா?
இங்கிலீசை மிக்ஸ் பண்ணி கதைக்கிறது தப்பா?
நீர் எந்த சென்ச்சரிலையா இருக்கிறீர்?
நாங்க எல்லாம் வந்து வன்னி காட்டுக்குள்ள அயட்ஸ்பண்ண முடியாது.
தமில் மீடீயாக்களும் (சொறி மீடியங்களும்), அதி.மே.த.குவும், வேலையில்லா வம்மங்களும், சைவம் கத்திற தமில் சாமிகளும் சேர்ந்து சொன்னா சரியாயுடுமா?
அவங்களுக்குத்தான் பிரக்ரிக்கலா திங் பண்ண தெரியல்ல?

தமிழ் வேற லோயிக்கலா இல்ல, 35 எஸ்ரா எழுத்துரு இருக்காம், ஒன்பதில் குழப்பமாம்.
இதில போய் சேர்யரிய படிச்சிட்டு வந்து செய்தா, பேச்ன்ர கதி என்ன கதி?

நாங்கெல்லாம் இங்கிலீசிலை அல்லது சைனிஸ்சிலியோ வெட்டி விளுத்தினதுக்கு
பிறகு வந்து காலுல விளுவினம் பாருமன்.
ஐசே: வன் மோ திங், இந்த சன் ரி.வி மட்டும் சூரிய தொலைகாட்சி என்று பெயரை மட்டும் மாத்தட்டும், நான் என்ன தமிழ்நாடே மாறிடும்.

 

said ... (07 May, 2005 00:48) : 

//முந்தின பதிவொண்டில உங்கள 'அண்டப் புளுகி' எண்டு சொன்னதையும் இப்ப திருப்பி எடுத்துக்கொள்ளுறன்.\\
வசந்தன் எப்ப எங்க மிஸ் பண்ணீட்டன். லிங்கத் தாங்கோ பாக்க வேணும். ஆனால் என்ர கருத்தை எழுதமாட்டன். இப்பிடியே விடுவம்.

 

said ... (07 May, 2005 00:53) : 

அட நீங்களின்னும் பாக்கேலயோ?
கண்ணிவெடிப்பதிவில முன்னுக்கிருக்கிற ஆள விஜய் எண்டு சொன்னதுக்கு எழுதின பின் "ஊட்டம்".

 

said ... (07 May, 2005 03:29) : 

யோவ் Anonymous ... கலந்து கதைக்கிறது முழு தப்பு.. இது வந்து மொழிக் கொழை/கொலை? யில் போய் முடியும்... கவணம்

 

said ... (07 May, 2005 07:06) : 

//...யாழ்ப்பாணத்தை , தஞ்சாவூரை உச்சரிக்கமுடியாமல் ஜாஃப்னா, தாஞ்சூர் என வெள்ளைக்காரன் சொன்னதை //
இதுலே தாஞ்சூர் கொஞ்சம் பரவாயில்லை. அவுங்களுக்கு வாயிலே நுழைஞ்சது இவ்வளவுதான். ஆனா
யாழ்பாணம் எப்படி ஜாஃப்னா ஆகும்?
புரியலையே?

 

said ... (07 May, 2005 11:00) : 

மற்றைய ஐரோப்பியர் (போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்,..) வணிகத்துக்காக இந்தியா வந்தபோது வணிக நோக்கின்றி சமயம் பரப்ப மட்டுமே வந்தவர்கள் ஜெர்மானியரும் இத்தாலியரும். இதைபற்றிய என் பழைய பதிவு இங்கே (மறுமொழிகளையும் படிக்கவும், மேலும் தகவல்கள் இருக்கின்றன).

'ya' என்ற ஒலி ஜெர்மன் மொழியில் 'ja' என்றே எழுதப்படும். எனவே யாழ்ப்பாணம் என்பதன் திரிந்த ஜெர்மன் உச்சரிப்பிலிருந்து ஜாப்னா (யா->ஜா, ழ்ப்->ஃப், பாணம்->ணா) வந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

மதி சொன்னதுடன் கூட: ஆங்கிலம் என்பது தமிழர்கள் கண்டுபிடித்த சொல்லாக்கம் அல்ல. 'anglo' என்ற முன்னொட்டு (prefix, adjective) தெரிந்ததுதானே. அதுவும் ஜெர்மானிய வேர்களிருந்து வந்திருக்கலாம் என்பது என் அனுமானம்.

இந்த ஜா-யா திரிபின் நீட்சியே சில ஜெர்மன் வாழ் தமிழர்கூட 'ஜெர்மனி'யை 'யேர்மனி' என்கிறார்கள் என்றும் அனுமானித்திருக்கிறேன். ஒருவிதத்தில் யாழ்ப்பாணத்தை ஜாஃப்னா ஆக்கிய ஜெர்மானியரைப் பழிவாங்கும் முகமோ:P

வசந்தன், நட்சத்திர வாரம் படுசுறுசுறுப்பாகப் போகிறமாதிரி இருக்கிறது. நடத்துங்க.

 

said ... (07 May, 2005 11:02) : 

//...என்பதன் திரிந்த ஜெர்மன் உச்சரிப்பிலிருந்து...//
என்பது '...என்பதன் திரிந்த ஜெர்மன் வரிவடிவத்திலிருந்து..' என்று வரவேண்டும்.

 

said ... (07 May, 2005 11:19) : 

காசி நீங்கள் சொன்னது அநேகமாகச் சரி ஆங்கிலோசக்சன் வழிவந்ததால் பிரெஞ்சில் ஆங்க்லைஸ் என்பார்கள் அப்படியே தமிழில் ஆங்கிலம் என்கிறோம்.அதே மாதிரி ப்ரெஞ்சில் ப்ரெஞ்சுக்கு இருக்கும் உச்சரிப்பு வேறு ஆங்கிலத்தில் இருப்பது வேறு.ஆங்கிலமே பல்வேறு மொழிகளில் கடன்வாங்கி ஒலியிணைகளை உருவாக்கிப் பயன்படுத்தும்போது அதற்கிணையான சொற்களை தமிழில் உருவாக்கக்கூடாது என்பது வேடிக்கையாக இருக்கிறது.அப்படியானால் இங்கிலிஷ் என்று சொல்வதே தவறு ஆங்க்லைஸ் என்றுதான் தமிழில் சொல்ல வேண்டும்.

இதேமாதிரித்தான் நாட்டுப் பெயரும் இங்க்லண்ட் ஐ இங்கிலாந்து என்று தமிழில் கூறுவதை பலர் கேலிபண்ணுகிறார்கள் பிரெஞ்சிலோ,சைனிசிலோ,ஜேர்மனிலோ அநேகமான மொழிகளில் நாடுகளின் பெயரை தங்களுக்கு ஏற்றமாதிரி மாற்றி வைத்திருக்கிறார்கள்.இவற்றிடமிருந்து தான் நாடுகளின் ஆங்கிலப் பெயர்கள் வந்தன உதாரணமாக இந்திய என்பதை இண்டியா என்றமாதிரி.

இதையும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றக் கூடாது என்று அடம்பிடிப்பது நன்றாக இல்லை.

பயர்பொக்ஸை நெருப்பு நரி என்று மொழிபேர்ப்பதற்கு நானும் ஒப்பவில்லை

 

said ... (07 May, 2005 12:09) : 

firefox ஐ தமிழாக்குவது 'கொக்கக் கோலா'வுக்குத் தமிழ்ச்சொல் கண்டுபிடிப்பதைப் போன்றது.
அதைத் தமிழுக்கு ஏற்றமாதிரி எழுத முயற்சிக்கலாமேயொழிய மொழிபெயர்ப்பது சரிவராது. அப்படியெனில் ஒவ்வொரு நாட்டுக்கும் புதுப்புதுப் பெயர்கள் தமிழில் உருவாக்க வேண்டிவரும்.

பின்னூட்டமிட்ட காசிக்கு நன்றி.

 

said ... (07 May, 2005 16:37) : 

Dear Vasanthan,

Why don't you blog in English language only?

 

said ... (15 December, 2005 20:25) : 

எழுதிக்கொள்வது: lely

நெறள

10.52 15.12.2005

 

said ... (15 December, 2005 21:47) : 

//இங்லீஷ் என்ற அருமையான சொல்லிருக்க ஆங்கிலம் என்று அதை மாற்றி வைத்திருக்கிறார்கள். பரதேசிகள்//

:) :) :)

 

said ... (15 December, 2005 21:52) : 

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. தமிழைத் தமிழாப் பேசுங்க. எழுதுங்க. வெளியாட்கள் கிட்ட பேசைல வேண்டிய பாஷைல பேசுங்க. ரெண்டையும் கலந்து கெடுக்காதீங்க.

ஆங்கிலத்தில் பேசுறப்போ நாம அந்த இலக்கணப்படிப் பேச எவ்வளவு முயற்சிக்கிறோம். அந்த முயற்சியைத் தமிழிலும் எடுங்க.

எடுக்கலைன்னா போங்க. வேறென்ன சொல்ல.

 

said ... (16 December, 2005 00:39) : 

ராகவன்,
இங்கும் வந்துவிட்டீர்களா?
நன்றியும் மகிழ்சியும்.

ஆனால் உங்கள் பின்னூட்டம் யாருக்கென்று புரியவில்லை. எனக்குத்தானேன்றால்,
இப்பதிவை நான் எழுதியபோதே நீங்கள் படித்திருந்தால் உங்களுக்கு இப்பதிவு சரியானபடி புரிந்திருக்கும். கறுப்பியுடன் தொடர்ந்த பின்னூட்ட உரையாடலும் உணர்த்தியிருக்கும். இதற்கு முன் நான் பதிந்த நாலைந்து பதிவுகளும் என்நிலை பற்றிச் சொல்லும்.

சிலதுகள் காலத்தை வென்று நிற்பதாகச் சொல்வார்கள். ஆனால் இப்பதிவு, அந்தந்தக் காலத்திலேயே படித்துவிட வேண்டிய வகைக்குள் வரும் பதிவு.;-(((

 

said ... (16 December, 2005 02:07) : 

காசி சொல்லும் விசயம், ஸ்பானிய மொழியிலும் காணக்கிடைக்கும். "சான் ஓசே" வை அமெரிக்க வந்த புதிதில் யார்தான் "சான் ஜோஸ்" என்று சொல்லியிருக்கமாட்டார்கள்?

ஃபயர்பாக்ஸை நெருப்புநரி என்று மொழிபெயர்க்காமல் வேறு எப்படி மொழி பெயர்க்கமுடியும்?
அதில் மொழிபெயர்ப்பில் பிரச்சினை இல்லை. அது கணினி சம்பந்தப்பட்ட நிரலியாகிப்போனதால்
மொழிபெயர்த்தால் என்னவென்று புரியவே வாய்ப்பில்லாமல் போய்விடும். மேலும் "ஃபயர்பாக்ஸ்" என்று (கேவலமாக இருந்தாலும்) எழுதினால் மைய நீரோட்டத்துடன் சேர்ந்து புரிந்து கொள்ளப்படும். தனித்த விசயமாய் பார்க்கப் படாது.

வசந்தன் ,
அது கறுப்பி ஒஸ்திரேலியாவில் யாரிடமெல்லாம் அடிவாங்கினாரோ அவர்களைப் பற்றிச் சொல்கிறார். நீங்கள் ஏன் அநாவசியமாய் பயப்படுகிறீர்? (* *)

 

post a comment

© 2006  Thur Broeders

________________