Thursday, September 22, 2005

தமிழீழ வைப்பகம் பற்றி AFP...

விடுதலைப்புலிகளால் நடத்தப்படும் 'தமிழீழ வைப்பகம்' பற்றி பன்னாட்டுச் செய்தி நிறுவனமான AFB செய்திக்கட்டுரை வெளியிட்டுள்ளது.

KILINOCHCHI, Sri Lanka (AFP) - Sri Lanka's Tamil Tigers have no security cameras or guards protecting their bank. Yet they say it is the safest place for customers to deposit cash and gold both in times of war and peace.

The Bank of Tamileelam (BOT) is not recognised by Sri Lanka's Central Bank but the rebel financial institution in Kilinochchi, 330 kilometres (203 miles) north of Colombo, has full management of monetary policy in Tiger territory.

The Tamil Tigers set up the bank in May 1994, after first establishing their own police force three years earlier. Since then, they have adopted their own administration and legal system to strengthen claims for a separate state called Eelam.

முழுக்கட்டுரையும் படிக்க....


இலங்கைத் தீவிலேயே மிக பாதுகாப்பான வங்கியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியான 'தமிழீழ வைப்பகம்' திகழ்கிறது என்று தொடங்கி, அதன் வட்டிவீதங்கள், போர்க்காலத்திலும் போரற்ற காலத்திலும் அதன் சேவைகள் என்று அக்கட்டுரை விரிகிறது.

இவ்வங்கி முழுக்க முழுக்க புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மட்டுமே செயற்படுகிறது. இவ்வங்கியில் ஆயுதம் தரித்த பாதுகாவலர்களை யாரும் காண முடியாது. கண்காணிப்புக் கருவிகள்கூட கிடையாது. ஆனால் முழுப்பாதுகாப்பான, நம்பிக்கையான வங்கி. இதன் பொறுப்பாளர்கள் போராளிகளாவர்.

தற்போது இவ்வங்கியில் பதினைந்து மில்லியன் டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளதென்று அதன் பணிப்பாளர் வீரத்தேவன் கூறியுள்ளார்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, September 20, 2005

ஒஸ்ரேலியாவிற் பனங்காய்ப் பணியாரம்.

முதலொருக்கா சயந்தன் பனங்காய்ப்பணியாரத்தின்ர படத்தைப்போட்டிருக்கேக்க அதைப்பார்த்து நான் வாயூற, ஒஸ்ரேலியாவில பனங்களி விக்கப்படுதெண்டு ஷ்ரேயா சொல்ல, ஒரு மாதிரித் தேடிப்பிடிச்சு வாங்கிப்போட்டன்.
தாய்லாந்திலயிருந்து போத்தலில அடைக்கப்பட்டு வருது. 450 கிராம் களிப்போத்தல் 3 டொலர்.சரியெண்டு வாங்கி வந்து இண்டைக்கு பனங்காய்ப்பணியாரம் செய்தாச்சு. நான் தான் செய்தன். பனங்களி விறுத்தமில்ல. போத்திலத் திறந்த உடனயே குப்பெண்டு அடிச்சுதே ஒரு புளிச்ச மணம். எங்கட ஊர்ப்பனங்களி மாதிரி ருசியுமில்ல.சரி இனியென்ன செய்யிறதெண்டு முதல் அரைப்போத்தலில கொஞ்சம் செய்து பாத்தன். இனிப்புக் கூடப்போட்டுத்தான் செய்தன். நல்ல பதமா, நிறமா வந்துது. ஆனா வாயில வைக்கேக்க அந்தப் புளிச்ச மணம் சாதுவாக் குழப்பீச்சு.

என்ன செய்யலாமெண்டு யோசிச்சுட்டு பனங்களிய அடுப்பிலவச்சு நல்லாய் காச்சினன். வத்தவத்த தண்ணி கலந்து நல்லாக் காச்சனன். பிறகு புளிச்ச மணம் கொஞ்சம் குறைஞ்சுது. அதுக்குப்பிறகு மிச்சத்தைச் செய்தன். முந்தினதவிட மணம் குறைஞ்சிருந்திச்சு. ஆனா களி கறுத்துப்போயிட்டதால சரியான சிவப்பு நிறம் வரேல. ஆனா நல்ல ருசியா இருந்திச்சு.நான் உந்தக் களிப்போத்தல் வேண்டி பத்துநாளாச்சு. ஆனா இண்டைக்கு ஏன் பணியாரம் செய்தன் எண்டு கேக்கிறியளோ? இண்டைக்குத்தான் உங்க சிட்னியில ஏதோ மாநாடு கூட்டினமாம். அவையின்ர சார்பா நான் பணியாரம் செய்து சாப்பிட்டன். அவை அங்க சந்திக்க, நான் பனங்காய்ப்பணியாரம் திண்டு மாநாட்டில பங்குபற்றினன்.

படத்தில இருக்கிற பணியாரங்கள் ஒரு சேப்புக் (shape) கெட்டதா இருக்கு. ஆனா நல்ல வடிவான உருண்டையாயும் பணியாரங்கள் வந்தது. அதுகளப் பொறுக்கி அடுக்கிப்போட்டு படமெடுக்கிறதுக்கு கமரா எடுக்கப்போய் வாறதுக்குள்ள அந்தத் தட்டு வெறுமையாப் போச்சு. பிறகென்ன மிஞ்சினத வச்சுத்தான் உந்தப்படங்கள் எடுத்தனான்.

ஷ்ரேயா, சயந்தன்!
எப்பிடியெண??
உங்கள விட்டுட்டு நான் மட்டும் பணியாரம் திண்டிட்டன்.


சயந்தன், முடிஞ்சா என்ர சார்பில "பனங்காய்ப் பணியாரம் செய்வது எப்பிடி?" எண்டு இன்பத்தமிழொலி வானொலியில வாற சனி நிகழ்ச்சி செய்யும்.
"கத்தரிக்காய்ப் பச்சடி செய்வது எப்படி?" எண்டு சொல்லுறதவிட இது நல்லாயிருக்கும்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, September 17, 2005

வானொலியில் சயந்தனின் செவ்வி

நேற்றிரவு மெல்பேணிலிருந்து சிட்னிக்குப் புறப்பட்ட சயந்தன் எதுவித சிக்கலுமின்றி நலமாய்ப் போய்ச்சேர்ந்தார்.
வலைப்பதிவர் மாநாடுக்கு முன்பு வானொலி நிகழ்ச்சியொன்று செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.

இன்று காலையே அவர் இன்பத்தமிழொலி வானொலியில் தனது நிகழ்ச்சி வருமென்று சொல்லிச் சென்றிருந்தார். நானும் இத்தகவலை ஷ்ரேயாவுக்குச் சொல்லி, கட்டாயம் இந்நிகழ்ச்சியைக் கேட்கும்படி கேட்டிருந்தேன்.

சகவலைப்பதிவாளர் ஒருவரின்ர செவ்வி வானொலியில் வருதெண்டு காத்திருந்தேன்.
நிகழ்ச்சியும் வந்தது. ஒருமணித்தியால நிகழ்ச்சி. சில இளைஞர்கள்கூடி அந்த ஒருமணித்தியாலத்தையும் ஒருமாதிரி போக்காட்டீச்சினம். அதில எங்கட சயந்தனின்ர நிகழ்ச்சியும் வந்திச்சு.

என்ன நிகழ்ச்சியெண்டு கேக்கேல?
"கத்தரிக்காய்ப் பச்சடி செய்வது எப்படி?"

இன்னும் ஆளின்ர தொடர்பு கிடைக்கேல. இதுதான் அவர் சொன்ன செவ்வியோ இல்லாட்டி உண்மையிலயே இவரின்ர செவ்வி வரப்போகுதோ தெரியேல. என்னதான் வாறதெண்டாலும் இண்டைக்கு வந்திருக்க வேணும். எண்டபடியா உதுதான் சயந்தனின்ர நிகழ்ச்சியெண்டு நான் நினைக்கிறன். ஷ்ரேயாவும் இசைநிகழ்ச்சிக்குப் போயிட்டபடியால தொடர்பு கொள்ள முடியேல.

உவருக்கு என்னெண்டு கத்தரிக்காய்ப் பச்சடி செய்யிறதப் பற்றித் தெரியுமெண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன். நிகழ்ச்சியக் கேக்கேக்க ஒரு புத்தகத்தைப் பாத்து வாசிச்சமாதிரியிருந்திச்சு. (அனேகமா மணிமேகலைப் பிரசுர வகையறாவா இருக்கும்).

இன்பத் தமிழொலி வானொலி பாலசிங்கம் பிரபாகரனுக்கு ஒரு கேள்வி.
உந்தப் புத்தகத்தை வாசிக்கிறதுக்காக மெல்பேணிலயிருந்து ஒருத்தன் வந்துதான் செய்யவேணுமோ?

இந்த நிகழ்ச்சி பற்றி சயந்தன் விரிவா எழுதுவார் எண்டு நினைக்கிறன். நான் இந்தத் தகவல் வெளியிட்டதுக்கு, அவர அதப்பற்றி எழுத வைக்கிறதும் ஒரு காரணம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, September 16, 2005

உண்மைகள்.

ஒஸ்ரேலியப் பாராளுமன்ற உறுப்பினரின் 'தமிழீழ' விஜயமும் கருத்துக்களும்.

ஒஸ்ரேலியாவின் New South Wales பாராளுமன்ற உறுப்பினரான Ms VIRGINIA JUDGE MP இலங்கை சென்று வன்னியுட்பட்ட பகுதிகைளைப் பார்வையிட்டுத் திரும்பிய கையோடு சிறந்தவொரு உரையை வழங்கியுள்ளார். இவரை வன்னி செல்லவிடாமல் பல தடங்கல்களைப் போட்டபோதும் சென்று வந்துள்ளார்.நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் அவர் தனதுரையை நிகழ்த்தினார். அதில் தான் சிறிலங்காவில் கண்டவை, முல்லைத்தீவில் கண்டவை, எனப்பலவிதயங்களைச் சொல்கிறார். சிறிலங்காவில் அரசியல், பொருளாதார உரிமைகள் சரியாகப் பகிரப்படவில்லையென்பதையும் ஆலங்கள் மீதான குண்டுவீச்சுக்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
"Racism and fear is fostered. It is the politics of division, exclusion and misrepresentation, with the truth hidden from the outside world. I experienced first-hand a concerted campaign to prevent me fromtravelling to Tamil Eelam."
என்கிறார்.

தான் சிறிலங்கா புறப்படும்போது asiantribune இணையத்தளத்தால், தான் $100,000,00 புலிகளுக்குக் காவிச்செல்வதாகப் பரப்பப்பட்ட செய்தியையும் சாடியுள்ளார். அது தன்னைப் பயப்படுத்த எடுத்த முயற்சியெனவும் சொல்லியுள்ளார்.

மேலும் வன்னியல் தமழீழ நீதிமன்று, சட்டக்கல்லூரி, காவல்துறை நிலையங்கள், மருத்துவ தொழிநுட்பக் கல்லூரிகள், வங்கி மற்றும் சிறுவர் காப்பகங்கள் என்பவற்றுக்கு நேரடியாகச் சென்று வந்துள்ளார். அவை பற்றியும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பற்றியும் தனது கருத்துக்களைக் கூறியுள்ளார்.

இறுதியில் அங்குள்ள அவசரத் தேவைகளையும் சர்வதேசம் செய்ய வேண்டிய அவசர உதவிகளையும் சொல்லி கட்டாயம் அப்பகுதிகளுக்கு அவர்கள் செல்ல வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.இதன் முழுமையான PDF வடிவக் கோப்பைப் பார்க்க இங்கே கிளிக்கவும்.

கீழே அந்தப் பேச்சை முழுமையாக ஆங்கில வடிவத்தில் தருகிறேன்.
-----------------------------------------------------------

AUSTRALIANew South Wales - Legislative Assembly
PARLIAMENTARY DEBATES (HANSARD)
FIFTY-THIRD PARLIAMENT
- FIRST SESSIONTHURSDAY
15 SEPTEMBER 2005.

SRI LANKA CIVIL, POLITICAL AND ECONOMIC RIGHTS

Ms VIRGINIA JUDGE MP (Strathfield) [5.08 p.m.]:
Sri Lanka is in crisis. This is a nation divided—a nation where civil, political and economic rights are not equally shared. Last week I returned from a visit to Sri Lanka, where I went to witness these things for myself and to research a suitable project for funds raised here after the tsunami to assist victims and their families in Sri Lanka. I did so at the urging of the 3,000-strong Tamil community in my electorate of Strathfield, Sydney, New South Wales. Many came as refugees fleeing the 20-year civil war in Sri Lanka. They are proudly Australian, exemplary citizens contributing much to our civic life and community. But they are also deeply concerned for their homeland, especially the Tamil minority.

The Tamils are a distinct people with their own language, culture, traditions and spirituality. Since independence in 1948, power has been vested mainly in the Singalese—predominantly Buddhists—who currently comprise about 80 per cent of the population. The Tamils—mainly Hindus—comprise the remaining 20 per cent of the population, along with much smaller Christian and Muslim communities. Over time these minorities have progressively seen their rights eroded through ingrained discrimination and segregation. As a result, the Tamils and other minorities have a sense of oppression and alienation. These are some examples of that discrimination at work. Tamils have to get higher marks than Singhalese for entry to the same courses at universities. In the Civil Service and private enterprise, jobs have been systematically allocated to Singhalese over Tamils. In enterprise and commerce the Tamils have been systematically cut out of the opportunities afforded to the majority. Several Catholic priests informed me about the systematic and endemic abuse of human rights by the Sri Lankan Government within the Tamil community. Indeed, one priest gave me a six-page list of churches damaged and destroyed by aerial bombing and shelling in the north of the island. There were 93 fully damaged, 186 partially damaged and 20 requiring minor repair! All these things breed resentment, frustration and hatred.

To make matters worse, the majority-dominated Government has manipulated and used the media to provoke bias against the minorities. Racism and fear is fostered. It is the politics of division, exclusion and misrepresentation, with the truth hidden from the outside world. I experienced first-hand a concerted campaign to prevent me from travelling to Tamil Eelam. Before I left Sydney, the editorial advisor and head of the Australian Bureau of the Asian Tribune alleged I was carrying nearly $100,000,00 cash into Sri Lanka. If true, this would have meant I had broken Australian law as well as placing my life in danger. I believe this was a covert effort to try to scare me from visiting Sri Lanka. Thankfully I did not fall for this pathetic attempt and I was able to witness for myself the suffering of this proud people as well as their determined efforts to rebuild their community. The Tamils are a resilient people. I observed that in a remarkable three-year period the Tamils developed a virtual state within virtual state within the north and north-east of Sri Lanka.

I visited their judiciary and court, school of law, police station, police academy, medical and technical colleges and small industries, a community bank plus a children's home housing 278 children left orphaned by the war and the recent tsunami. The Tamil Rehabilitation Organisation (TRO) runs a variety of development, relief and reconstruction projects as well as assisting several non-government organisations with their projects. All this is a tribute to the spirit and resilience of the Tamil people. But it is no substitute for a final political settlement to this long-lasting dispute. Thankfully, some sort of end is in sight with a cease fire brokered by the Norwegian Government signed in February 2002. For the first time in a generation, the economy started to flow and people could travel about the island, albeit it with some difficulty. It is thebeginning of a road map for lasting peace, and now the Sri Lankan Government must deliver by giving up its monopoly of power. That means a genuine federal structure that guarantees the right of the Tamil minority to autonomy so they can protect their culture and enjoy full economic and political rights.

Every human has the right to a place they can call home, and to equality of opportunity, to social justice, to freedom: one united Sri Lanka based on a federal structure with equity and self-determination for the Tamil people. War is destructive and tragic. There are casualties on both sides. Acts are committed that should never have happened in civil society. The curtain needs to be pulled right back. The Tamil and other minority groups need support. The international community needs to take urgent action, conduct independent research, visit these areas, engage with the community and see first-hand what is happening. That is my prayer and hope for this beautiful country. Then the weapons can be put away forever. Then the preciousresources of this bountiful country can be put into improving the lives of these beautiful people who have suffered so much for so long. That is worth the dream. That is worth the effort. That is worth the struggle. I commend the plight of the Tamil people to the House.
(end)

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, September 15, 2005

தொலைபேசியூடு ஒரு சந்திப்பு.

இன்று தென்துருவ வலைப்பதிவர் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் மற்றும் சிட்னிக்கிளையின் பொறுப்பாளர் ஆகியோரிடையே தொலைபேசி வழிச் சந்திப்பு நடைபெற்றது.

மெல்பேணிலிருந்து சயந்தனும் வசந்தனும் சிட்னியிலிருந்து ஷ்ரேயாவும் இச்சந்திப்பிற் கலந்துகொண்டார்கள். எதிர்வரும் வாரம் சிட்னியில் நடைபெறவிருக்கும் மாநாட்டுக்கு முன்னோடியாக இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

அம்மாநாட்டு ஒழுங்குகள், அதில் விவாதிக்கப்பட வேண்டிய விதயங்கள் மற்றும் சாப்பாட்டு ஒழுங்குகள் என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டன.
ஒஸ்ரேலியாவில் இன்று தமிழ் மற்றும் தமிழரின் நிலைபற்றியும் சுருக்கமாக ஆராயப்பட்டது. மாநாட்டில் விரிவாக ஆராயப்படும்.

தொடக்கத்தில் சீரியசாகப் போய்க்கொண்டிருந்த கலந்துரையாடல் பின் தத்தமது சொந்த விசயங்களைப் பகிர்ந்துகொள்ளும் நிலைக்கு வந்தது. அதில் அவரவரின் சொந்த இடங்கள், படித்த இடங்கள், வேலைத்தளங்கள் உட்பட இன்னபிற விசயங்களும் கதைக்கப்பட்டன.
இறுதியில் நாளை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் செயலாளரை வாழ்த்தி கலந்துரையாடல் நிறைவு பெற்றது.

இக்கலந்துரையாடல் தான் சிட்னிக்கிளையுடன் நடத்தப்பட்ட முதற்கலந்துரையாடல். மிகப் பயனுள்ள வகையில் முக்கால்மணிநேரக் கலந்துரையாடல் நிறைவு பெற்றது.
மாநாடு முடிந்ததும் விரிவான அறிக்கை வெளியிடப்படும். காத்திருங்கள்.

கலந்துரையாடல் முடிந்தபின் சயந்தன் எனக்குச் சொன்னார், ஷ்ரேயா கதைக்காமல் எந்த நேரமும் சிரித்துக்கொண்டிருக்கிறாரென்று.
ஷ்ரேயா கதைப்பதே சிரிப்பது போல் தான் என்று சொல்ல வருகிறாரோ?

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


இணையத்தில் விடுதலைப் புலிகள்.

விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடு இப்போது இணையத்திற் கிடைக்கிறது.
அவர்களின் பழைய வெளியீடுகள் உட்பட அனைத்தும் இணையத்திற் கிடைக்கிறது. 125 ஏடுகள் இதுவரை வந்துள்ளன.
முன்பும் இப்படி வெளிவந்துவிட்டதென்று ஓர் இணைப்பு என்பதிவில் வெளியிடப்பட்டது.
பின் என்ன காரணத்தாலோ அப்பக்கம் நிறுத்தப்பட்டிருந்தது.
இப்போது புதுப்பொலிவுடன் வெளிவந்துவிட்டது.
பழைய வெளியீடுகளும் இருப்பதால் வாதங்களுக்கும், வரலாறு சார்ந்து குறிப்பிட்ட சில சம்பவங்கள் பற்றிய தெளிவுக்கும் இவை உதவக்கூடும்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, September 14, 2005

கடன் வாங்கிக் கொள்ளல் அல்லது கொல்லல்.

யாழிலிருந்து வரும் உதயன் பத்திரிகையில் அண்மையில் வந்த செய்தித் தலைப்பு இது.
“மகிந்தவுடன் சந்திரிக்கா லடாய்.”

இந்த 'லடாய்' என்ற சொல்லுக்கான விளக்கம் எனக்குத் தெரிந்திருந்தது என்றாலும் திடீரென உதயனில் இத்தலைப்பைப் பார்த்ததும் ஓர் அதிர்ச்சி.
இந்த ‘லடாய்’ என்ற சொல் யாழ்ப்பாணத்தில் யார் பயன்படுத்துவது? நானறிய யாரும் இச்சொல்லைப் பேச்சுவழக்கிற்கூடப் பயன்படுத்தியதில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் மட்டுமே விற்பனையாகும் உதயன் பத்திரிகை இச்சொல்லை தமிழகத்திலிருந்து கடன்பெற்று யாழ்ப்பாணத்தில் செய்தித்தலைப்பாகப் போடுகிறது.

இதுமட்டுமன்று, இதற்கு முன்னரும் ஓரிரு தடவைகள், இப்படியான மக்களிடத்தில் அறவே பயன்பாட்டிலில்லாத சொற்களை வைத்துச் செய்தித்தலைப்புக்கள் போடப்பட்டன.
“மண்ணெண்ணெய் அபேஸ், குமுறுகிறார் மகேஸ்” (மகேஸ் அப்போது யாழ்மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்)
“இன்னாருடன் இன்னார் ஜல்மா”
கல்தா, மேலும் பல சினிமாக் கிசுகிசுப்பாணிச் சொற்கள்.

மக்களிடத்தில் நல்ல தமிழ்ச்சொற்களைப் பரப்புவதென்பது பத்திரிகைகள் முன்னுள்ள கடமை. ஆனால் இங்கே மாறி நடக்கிறது. மக்களிடத்தில் இயல்பான பயன்பாட்டிலிருக்கும் சொற்களைப் போட்டு செய்தி எழுதுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அறவே பயன்பாட்டிலில்லாத, அதேநேரம் அறிமுகப்படுத்தியாகவேண்டிய கட்டாயமற்ற சொற்களைப் போட்டு பத்திரிகை நடத்துவதென்பது அச்சொற்களை வலிந்து மக்கள்மீது திணிக்கும் முயற்சியாகவே படுகிறது.

உண்மையில் தமிழகத்தின் ஆனந்தவிகடன், குமுதம், குங்கும வகையறாச் சஞ்சிகைகளைப் படிக்காத யாழ்ப்பாணத்தானுக்கு ‘லடாய்’ என்றால் என்னவென்று தெரியப்போவதில்லை. இதுபற்றி முன்பு உதயனில் பணியாற்றிய ஒருவருடன் கதைத்தபோது, உதயன்தான் பல சொற்களை யாழ்ப்பாணத்துக்கு அறிமுகப்படுத்தியதென்றார். என்னை வெறுப்பேற்ற அதைப்பெருமையாகச் சொல்லி சட்டைக் கொலரை இழுத்துவிட்டுக்கொண்டார்.

உதயன் மட்டுமாவது பரவாயில்லை. அதன் சகோதரப் பத்திரிகையான சுடரொளி பயன்படுத்தும் சொற்களும் வசனநடையும் அப்பட்டமான தமிழகப் படியெடுப்பு.

யார் கண்டது? எதிர்காலத்தில் உதயனின் இச்செயல் பெரிய புரட்சியாகக்கூடச் சொல்லப்படலாம். இச்சொற்கள் யாழ்ப்பாணத்தில் சரளமான பயன்பாட்டுக்கு வந்துவிடவும்கூடும்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, September 03, 2005

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இது என்ன செடியென்று தெரிகிறதா?தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்.
பரிசெதுவும் தரப்பட மாட்டாது.

படத்தைத் தொட்டுப் பார்க்காதீர்கள்.
ஏன் அதிகநேரம் உற்றுக்கூடப் பார்க்காதீர்கள்.

படஉதவி: கருணா.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


ஜாம் போத்தல் விளக்கு.

ஏற்கெனவே 'சிதையா நெஞ்சு கொள்' என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.
அப்பதிவில் எம்மக்கள் யுத்தகாலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடியை எவ்வாறு எதிர்கொண்டார்களென்பதன் சிறுதுளியான ஜாம் போத்தல் விளக்கைப் பற்றி எழுதியிருந்தேன். அந்நேரத்தில் கைவசம் எந்தப்படமும் இல்லாதபடியால் படமேதும் போடவில்லை.
இப்போது அவ்விளக்கின் படம் கிடைத்துள்ளது. அப்படத்தை இங்கே தருகிறேன்.இப்படத்தை, தான் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது எனக்காக மினக்கெட்டுத் தானே தாயரித்துப் படமெடுத்து வந்த குழைக்காட்டனுக்கு நன்றி.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, September 02, 2005

'அப்பக்கோப்பை' பற்றிய ஓர் ஆராய்ச்சி.

எல்லாருக்கும் இந்தச் சொல் தெரியுமோ தெரியாது. எங்கட இடத்தில குறிப்பிட்ட இளமட்டத்தில இந்தச்சொல் பாவனையில இருந்திச்சு. இன்னொருத்தனைத் திட்டவோ மட்டந்தட்டி நக்கலடிக்கவோ இந்தச் சொல்லைப் பாவிப்பம்.

ஒருத்தன் விளங்காத்தனமாக அல்லது சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்தால் அல்லது தொடர்ச்சியாக ஒரேதவறைச் செய்தால், எப்படி முயன்றும் ஒருத்தனைத் திருத்த முடியாதென்று எரிச்சல் தோன்றும்போது இச்சொல்லைப் பாவித்துத் திட்டுவதுண்டு.'அவனொரு அப்பக்கோப்பை. ஒரு இழவும் விளங்காது' எண்டு ஒருத்தனத் திட்டுவோம். அதேபோல் திட்டும் வாங்குவோம்.

இதன் சரியான தோற்றம், காரணகாரியங்கள் எதுவுமறியாமலேயே ஆனால் சரியான சந்தர்ப்பங்களில் இச்சொல்லைப் பாவிப்போம். எந்த இடங்களில் இச்சொல்லைப் பாவிப்பதென எல்லாருக்கும் தெரிந்திருந்தது.

சரி இந்தச் சொல்லின் சரியான அர்த்தத்துக்கு வருவோம். அப்பக்கோப்பை என்றால் அப்பம் சுடும் தாச்சியைக் குறிக்கும். அப்பத்தாச்சி என்ன செய்யும்? எதையும் தன்னிடம் வைத்துக்கொள்ளாது. அதில் ஊற்றும் மாவை அப்படியே அப்பமாக்கி சிறுதுண்டுகூட தாச்சியில் ஒட்டாதபடிக்கு அழகாக அப்படியே திருப்பிக்கொடுத்துவிடும்.

தோசைக்கல்லிற்கூட மாவு ஒட்டும், இட்லிச்சட்டியில் மாவு ஒட்டும். ஆனால் அப்பத்தாச்சியில் எப்போதாவது மாவு ஒட்டிப்பார்த்திருக்கிறீர்களா? அதுதான் அந்தச் சட்டியின் சிறப்பு.

இங்கே இச்சொல்லை அப்பக்கோப்பை என்று மாற்றி ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு (இதுகளப் போடாட்டி பிறகு சண்டைக்கு வருவியள்) திட்டுவதற்குப் பாவிக்கிறோம். இதன் அர்த்தம் என்னவென்றால் எப்படி அப்பச்சட்டி தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் தனக்குள் ஊற்றப்படும் சகலதையும் திருப்பிக்கொடுத்துவிடுகிறதோ அதேபோல் இவர்களும் எதையும் உள்வாங்கிக்கொள்வதில்லை. அனைத்தையும் திறந்துவிடுவார்கள். இவர்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுத்தாலும் திருந்தப்போவதில்லை என்ற கருத்தில் இச்சொல் பாவிக்கப்படுகிறது.

இன்றும் ஏராளமானவர்கள் இச்சொல்லின் விளக்கத்தை அறியாமல் பாவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விளக்கும் முகமாகவே இப்பதிவு போட்டேன்.

திடீரென்று ஏனிந்தச் சொல் பற்றி யோசினை வந்ததெண்டா, இப்ப தான் கொஞ்சத்துக்கு முதல் ஒருத்தரை நேர திட்டிப்போட்டன். அவருக்கு இந்தச்சொல் புதுசு. அதுக்கு அவர் விளக்கம் கேட்டார். அவருக்கு விளங்கப்டுத்தின கையோட அதையே ஒரு பதிவாப்போடுறன்.

அப்பக்கோப்பையள் ஆராவது என்ர வலைப்பதிவப் பாக்க வருவினந்தானே. அவையளுக்கு ஒரு விளக்கமா இருக்கட்டுமெண்டு போட்டு வைக்கிறன்.

'பன்னாடை' எண்டு திட்டுறதுக்கும் இதுக்கும் கிட்டத்தட்ட ஒரே பொருளாத்தான் இருக்கு. ஆனா பன்னாடை எண்டு திட்டினா கடுமையாக் கோவம் வரும். மாறாக அப்பக்கோப்பையெண்டது அதே கருத்தைத்தாற ஆனா ஏச்சு வாங்கிறவன்(ள்) சிரிச்சுக்கொண்டே கேட்டுக்கொண்டு போற மாதியொரு சொல்லு.
நீங்களும் ஏன் திட்டுவதற்கோ ஏசுவதற்கோ இந்தச்சொல்லைப் பாவிக்கக்கூடாது?
முயன்றுபாருங்கள்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________